அஸ்வினுக்கு ஹூண்டாய் வெர்னா கார் பரிசுஅஸ்வினுக்கு ஹூண்டாய் வெர்னா கார் பரிசு ... அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.110 கோடி சரிவு அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.110 கோடி சரிவு ...
பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2011
06:23

இந்திய பங்கு சந்தைகளின் வர்த்தகம், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆக, இந்தியர்களுக்கு இது, இரட்டிப்பு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.தொடர்ந்து இரண்டாவது வாரமாக, நாட்டின் பங்கு வர்த்தகம், சிறப்பாக இருந்தது. இருப்பினும், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, சந்தையில் சிறிது சரிவு நிலை காணப்பட்டது. அன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 24 புள்ளிகள் குறைந்து, 19,420 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 7 புள்ளிகள் சரிவடைந்து, 5,826 புள்ளிகளிலும் நிலைபெற்றன. இந்த ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், மொத்தம் 605 புள்ளிகள் அதிகரித்திருந்தது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' மொத்தம் 172 புள்ளிகள் உயர்ந்திருந்தது.வெள்ளிக்கிழமை சந்தை சரிவடைய காரணம்: தொடர்ந்து எட்டு வர்த்தக தினங்களாக, பங்கு வர்த்தகம் நன்கு இருந்த நிலையில், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்ற பயத்தால், வெள்ளிக்கிழமை வர்த்தகம் சுணக்கம் கண்டது. அன்றைய தினம், வங்கித்துறை பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின.மோட்டார் வாகனங்கள் விற்பனை: எண்ணெ# விலை,எவ்வளவு உயர்ந்தாலும் அதுகுறித்து கவலை இல்லை என்ற வகையில், மோட்டார் வாகனங்களின் விற்பனை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தனி நபர்களின் வருவாய் அதிகரித்து வருவதே, வாகனங்கள் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணம். சென்ற மார்ச் மாதத்தில் விற்பனையான கார்கள் எண்ணிக்கை, öŒன்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 25 சதவீதம் கூடியுள்ளது. எப்போதும் போன்று, மாருதி நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில் மிக அதிகளவில் கார்களை விற்பனை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, மகிந்திரா அண்டு மகிந்திராவும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளது.உங்களிடம் கார் இருக்கிறதோ இல்லையோ, கார் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, உங்கள் பங்கு தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, அங்கு கார் உற்பத்தி கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது.இது, இந்தியாவின் கார் விற்பனையையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும். அதேசமயம், ஜப்பானிலிருந்து அதிகளவில் உதிரிப்பாகங்களை வாங்காத இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது நல்லதாக அமையும். கச்சா எண்ணெய்: கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து வழுக்கி விடும் பொருளாகத்தான் உள்ளது. கடாபியும் இறங்கி வருவதாக தெரியவில்லை; எண்ணெய் விலையும் குறைவதாகவும் தெரியவில்லை. கூடிவரும் கச்சா எண்ணெ# விலை, பங்கு சந்தையை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏறிவரும் ஏற்றுமதி: சென்ற பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் ஏற்றுமதி, சென்றாண்டின் இதே மாதத்தின் ஏற்றுமதியை விட, 49 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், அது மகிழ்ச்சி தரும் செய்தியாக இல்லை. ஏனெனில், இந்த ஏற்றம், ஏற்றுமதி செய்த பொருள்களின் அளவில் இல்லை. மதிப்பின் அடிப்படையில் மட்டுமே உயர்ந்துள்ளது. பொருள்களின் அளவு அடிப்படையிலும் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். ஹிண்டால்கோ: ஆதித்ய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோ, எப்போதும் நிலையான செயல்பாட்டை கொண்டுள்ள நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம், தொடர்ந்து முதலீடு செய்து, சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. அலுமினியம் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக, நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ், 8,000 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது. இதனால், இதன் பங்கின் விலை, வெள்ளிக்கிழமையன்று கூடியது. இந்திய நிறுவனங்களை வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்: இன்டர்நேஷனல் பேப்பர் என்ற அமெரிக்க நிறுவனம், இந்தியாவின் ஆந்திரா பேப்பர் நிறுவனத்தை 25.70 கோடி டாலருக்கு (1,182 கோடி ரூபாய்) வாங்கவுள்ளது. 'ஓபன் ஆபர்' அடிப்படையில், பங்கு ஒன்றை, 544 ரூபாய்க்கு வாங்க ஒத்துக்கொண்டுள்ளது. அதேசமயம், பங்குச்சந்தையில் ஆந்திரா பேப்பர் நிறுவனத்தின் பங்கு ஒன்று, 312 ரூபாய் என்ற அளவில் தான் விலைபோய் கொண்டுள்ளது. இந்தியாவில் காகிதங்களுக்கான தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால், உலக நாடுகளில், இதற்கான தேவை வளர்ச்சி, 1 அல்லது 2 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது. இந்தியாவின் இத்துறையின் வளர்ச்சி நன்கு இருக்கும் என்ற அடிப்படையில், அமெரிக்க நிறுவனம், ஆந்திரா @பப்பரின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குகிறது. புதிய வெளியீடுகள்: பி.டி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள், புதன்கிழமையன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன. அன்றைய தினமே, பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட குறைந்திருந்தது. தற்போது இதன் பங்கு ஒன்று, 24.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு பெரிய அடிதான். சமீப காலமாக, கோல் இந்தியா மற்றும் எம்.ஒ.ஐ.எல்.ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளின் விலை, இழப்பையே தருகிறது. எனவே, மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கின் விலையை, முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிடில், புதிய வெளியீடுகளை முதலீட்டாளர்கள் தவிர்க்கும் நிலை ஏற்படும். மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் நிறுவனம், மீண்டும் புதிய பங்கு வெளியீட்டை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் பங்கு வெளியீடு மேற்கொள்ள நினைக்கும் போதெல்லாம், சந்தை கீழே சென்று விடுகிறது. இதனால், பங்கு வெளியீட்டு எண்ணத்தை கைவிட்டு வந்தது. தற்போது, பங்கு சந்தை நன்கு உள்ளதால், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளும் வகையில் 'செபி' அமைப்புக்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளது. வரும் வாரம் எப்படி இருக்கும்? பங்கு சந்தையின் பயணம், கடந்த இரண்டு வாரமாக நன்றாகவே போய் கொண்டுள்ளது. பங்கு வர்த்தகம், இன்னும் சிறிது மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், நிறுவனங்களின் நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டிற்கான முடிவுகள் வரத்தொடங்கி விடும். எனவே, நீண்டகால அடிப்படையில் சந்தையில் இருப்பவர்கள், சிறப்பான செயல்பாடுகளை கொண்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம். - சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)