எல் அண்டு டி பைனான்ஸ்பங்கு வெளியீட்டின் மூலம்  ரூ.1,750 கோடி திரட்ட திட்டம்எல் அண்டு டி பைனான்ஸ்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,750 கோடி திரட்ட திட்டம் ... பறக்கிறது பருப்புகள் விலை பறக்கிறது பருப்புகள் விலை ...
உலகளவில் தொழில் உற்பத்தி: இந்தியா9வது இடம்:முதலிடத்தில் அமெரிக்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2011
06:28

புதுடில்லி:உலகளவில், தொழில் உற்பத்தியில், இந்தியா 9வது இடத்தில் இடம்பெற்றுள்ளது என, ஐ.நா. தொழில் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில் தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்ட நாடுகள் மற்றும் முன்னேறி வரும் நாடுகள் குறித்து, ஐ.நா., தொழில் மேம்பாட்டு அமைப்பு (யூனிடோ) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆ ய்வறிக்கையை யூனிடோ தலைமை புள்ளியியலாளர் ஷியாம் உபாத்தியாயா, டில்லியில் வெளியிட்டு பேசினார். அப்போது,தொழில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 10 நாடுகளில், இந்தியா 9வது இடத்தை பிடித்திருப்பதாக அவர் தெரிவித்தார். உலகில் பெரும்பான்மையான முன்னேறிய நாடுகளின் தொழில் உற்பத்தி, கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதும், சர்வதேச ச ந்தையில் இந்திய உற்பத்தி பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்திருப்பதும், இந்தியா 9 வது இடத்திற்கு முன்னேற காரணமாகும் என, ஷியாம் உபாத்யாயா தெரிவித்தார்.கடந்த 2000 - 2010ம் ஆண்டுகளில், உலகளவிலான தொழில் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 1.8சதவீதம் என்ற அளவில் உள்ளது. இருந்த போதிலும், தொழிலாளர் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதால், உற்பத்தி வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் உற்பத்திக்கான எரிசக்தி பயன்பாட்டிலும், இந்தியா குறிப்பிடத்தக்க அளவிற்கு சிக்கனத்தைக் கடைபிடித்துள்ளதாக, அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், இதே காலத்தில் தொழில் சார்ந்த எரிசக்தி பயன்பாட்டின் வளர்ச்சி, 3.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.உலகில் அதிக அளவிலான தொழில் உற்பத்தியில் அமெரிக்கா, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் சீனா, ஜப்பான்,ஜெர்மனி நாடுகள் உள்ளன. பிரேசில் 10வது இடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளின் வேகமான முன்னேற்றம் காரணமாக, இந்த பட்டியலை நிலையானதாக எடுத்துக் கொள்ள முடியாது.வளர்ச்சி பெற்று வரும் ரஷ்யா,மெக்சிகோ, ஸ்பெயின் நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உல கின் மொத்த தொழில் உற்பத்தியில் முன்னேறிய நாடுகளின் பங்களிப்பு, 3ல் 2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த 10 ஆண்டுகளில் வளரும் நாடுகளின் பங்களிப்பு, 20 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதே காலத்தில், உலகளவிலான தொழில் உற்பத்தியில், வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி ஆகிய நாடுகளின் பங்களிப்பு சரிந்துள்ளது. அதே சமயம் சீனா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று முன்னேறும் நாடுகளின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, சராசரியாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட முன்னேறிய நாடுகளின் தொழில் உற்பத்தி, கடந்த 2009ம் ஆண்டிற்குப் பிறகு, 3.7சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மந்த நிலையிலும்,சீனாவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்றும், கடந்த 2010ம் ஆண்டில் முன்னேறும் நாடுகளின் மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது என்றும் ஆ#வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)