ஆசிய பங்குச் சந்தைகளில் சுணக்க நிலை 'சென்செக்ஸ்' 39 புள்ளிகள் சரிவுஆசிய பங்குச் சந்தைகளில் சுணக்க நிலை 'சென்செக்ஸ்' 39 புள்ளிகள் சரிவு ... ஐடிபிஐ வங்கி நிகரலாபம் 62 சதவீதம் அதிகரிப்பு ஐடிபிஐ வங்கி நிகரலாபம் 62 சதவீதம் அதிகரிப்பு ...
அன்னிய நேரடி முதலீட்டில் மொரீஷியஸ் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
02:18

புதுடில்லி:இந்தியாவில், அதிகளவில் அன்னிய முதலீடுகளை மேற்கொண்டதில் மொரீஷியஸ் முதலிடத்தில் உள்ளது.சென்ற நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த மதிப்பீட்டு காலத்தில், நாட்டில் 1,835 கோடி டாலர் (84 ஆயிரத்து 410 கோடி ரூபாய்) மதிப்பிற்கு அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், 36 சதவீத பங்களிப்புடன், மொரீஷியஸ் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 8.3 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும், உள்ளன.மேலும், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து, ஆகிய நாடுகளின் பங்களிப்பு 6.1 சதவீத அளவிற்கு உள்ளது. சைபீரியா நாட்டின் பங்களிப்பு 4.5 சதவீதமாகவும், இங்கிலாந்தின் பங்களிப்பு 2.8 சதவீதமாகவும் உள்ளது.எனினும், முந்தைய நிதியாண்டின் (2009-10), ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்துடன், ஒப்பிடுகையில், சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், அன்னிய நேரடி முதலீடு 1,835 கோடி டாலராக (84 ஆயிரத்து 410 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற 2010ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட 34.4 சதவீதம் (2,463 கோடி டாலர் - 1 லட்சத்து 13 ஆயிரத்து 298 கோடி ரூபாய்) குறைவு.சென்ற 2009-10ம் முழு நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு 2,500 கோடி டாலராக (1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. இதில், சேவை துறையின் (நிதி மற்றும் நிதி சாராத) பங்களிப்பு 320 கோடி டாலர், அதாவது, 14 ஆயிரத்து 720 கோடி ரூபாய் (21 சதவீதம்) மதிப்பிற்கு இருந்தது.இதைத் தொடர்ந்து, தொலைத் தொடர்பு துறை 140 கோடி டாலர் - 6,440 கோடி ரூபாய் (8 சதவீதம்), மோட்டார் வாகனத் துறை 132 கோடி டாலர் - 6,072 கோடி ரூபாய் (7.1 சதவீதம்), மின்சாரத் துறை 123 கோடி டாலர் - 5,658 கோடி ரூபாய் (5 சதவீதம்) மற்றும் வீடு, ரியல் எஸ்டேட் துறை 11 கோடி டாலர் - 506 கோடி ரூபாய் (7 சதவீதம்) மதிப்பிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப் பட்டிருந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து, ஒரு சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதுபோன்ற, காரணங்களால், நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய முதலீடு குறைந்துள்ளது.நம் நாட்டில், தொலைதொடர்பு, குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட், கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் மின்சாரம்போன்ற துறைகளில் அன்னியநேரடி முதலீடு அதிகளவு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சென்ற 11 மாத காலத்தில், நம் நாட்டில், வர்த்தக நகரமான மும்பையில், தான் அதிக அளவு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நகரம், 570 கோடி டாலர் மதிப்பிற்கு, அதாவது, 26 ஆயிரத்து 220 கோடி ரூபாய்க்கு (31 சதவீதம்) அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து, டில்லியில் 240 கோடி டாலர் (11 ஆயிரத்து 040 கோடி ரூபாய்) மதிப்பிற்கு (13.40 சதவீதம்) முதலீடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் 132 கோடி டாலர் - 6,072 கோடி ரூபாய் (7.20 சதவீதம்), பெங்களூரில் 130 கோடி டாலர் - 5,980 கோடி ரூபாய் (7.10 சதவீதம்), மதிப்பிற்கும் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் எப்பொழுதும், அதிக முதலீட்டை மேற்கொள்ளும் அகமதாபாத், வழக்கத்திற்கு மாறாக, 69.20 கோடி டாலர் (3,183.20 கோடி ரூபாய்) என்ற குறைந்த அளவுக்கே, அன்னிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சேவை துறையில் அன்னிய முதலீடு 22 சதவீதம் சரிவு:சேவை துறையில், சென்ற நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, 327 கோடி டாலராக (14 ஆயிரத்து 958 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, இதற்கும் முந்தைய நிதியாண்டை விட 22 சதவீதம் குறைவு.அதாவது, கடந்த 2009-10ம் நிதியாண்டின், இதே 11 மாத காலத்தில், சேவை துறையில் (நிதி மற்றும் நிதி சாராத சேவை நிறுவனங்கள்) அன்னிய நிறுவனங்கள், 418 கோடி டாலர் (20 ஆயிரத்து 15 கோடி ரூபாய்) முதலீடு செய்திருந்தன.கடந்த 2008ம் ஆண்டு, சர்வதேச அளவில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியிலிருந்து, ஒரு சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதுபோன்ற காரணங்களால் தான், சேவை துறையில் அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)