பதிவு செய்த நாள்
12 மே2011
03:02
புதுடில்லி:வீடியோகான் நிறுவனம், 'இ-மெயில் டூ எஸ்.எம்.எஸ்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள் ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை (விற்பனை) அதிகாரி சுனில் டான்டன் கூறியதாவது:எங்களின் வாடிக்கையாளர்களுக்கு, 'இ-மெயில் டூ எஸ்.எம்.எஸ்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப் புதிய சேவையை பெற, ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் 3 ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகள் தேவையில்லை. இதன்படி, சாதாரண மொபைல் போன் வாடிக்கையாளர்கள் கூட, இ-மெயில் சேவைகளை எஸ்.எம்.எஸ்., வடிவில் பெறவும் மற்றும் அனுப்பவும் முடியும். இந்த சேவையை பெற, ஒவ்வொரு வீடியோகான் வாடிக்கையாளருக்கும், இ- மெயில் ஐ.டி., வழங்கப்படும். இப்புதிய சேவைக்கான கட்டணம், மாதத்திற்கு 30 ரூபாயாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு டான்டன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|