செயற்கை ரப்பர் பயன்பாடு 8 சதவீதம் வளர்ச்சிசெயற்கை ரப்பர் பயன்பாடு 8 சதவீதம் வளர்ச்சி ... உள்நாட்டில் நடப்பு 2011- 12ம் நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13 சதவீதம் உயரும் உள்நாட்டில் நடப்பு 2011- 12ம் நிதியாண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 13 ... ...
ஜனவரி - மார்ச் மாத காலத்தில்கம்ப்யூட்டர் விற்பனை 26 லட்சமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2011
01:50

மும்பை:நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், உள்நாட்டில் கம்ப் யூட்டர் விற்பனை, 26 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் மேற் கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6.2 சதவீதம் அதிகம்.நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், மடி கம்ப் யூட்டர் விற்பனை, சென்றாண்டின் இதே காலாண்டை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரண மாக வே, ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் விற்பனை உயர்ந்துள்ளது என, கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன் மை ஆய்வாளர் விஷால் திரிபாதி தெரிவித்தார்.இக்காலாண்டில், உள்நாட்டில் கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங் களின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.குறிப்பாக, மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில் ஏசர், டெல், எச்.பி. மற்றும் லெனோவா ஆகிய நான்கு பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, 50.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம், உள்நாட்டைச் சேர்ந்த எச்.சி.எல். நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, இக்காலாண்டில், 7.1 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பாண்டின் முதல் காலாண்டில், நுகர்வோர்கள், கம்ப்யூட்டர் வாங்குவது குறைந்துள்ளது. அதனால், எதிர்பார்த்த அளவிற்கு சந்தை வளர்ச்சி காணவில்லை. இருப்பினும், பெரிய நிறுவனங்கள், நடுத்தர மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்திருந்தது. அரசு துறை நிறுவனங்களும், இக்காலாண்டில் அதிகளவில் கம்ப்யூட்டர்களை வாங்கின.இவற்றின் பங்களிப்பு, சென் றாண் டின் இதே காலாண்டை போலவே இருந்தது என, திரிபாதி தெரிவித்தார்.கம்ப்யூட்டர் விற்பனையில், நடப் பாண் டின் முதல் காலாண்டில், டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 16.7 சதவீதமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, எச்.பி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 12.1 சதவீதமாக காணப்பட்டது.இவ்விரு நிறுவனங் களையும் அடுத்து, ஏசர் மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்கள் முறையே, 11.9 சதவீதம் மற்றும் 9.7 சதவீத பங்களிப்புடன், 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)