'பாரத் பைக்'காக வலம் வரப் போகும் பாக்ஸர் 150'பாரத் பைக்'காக வலம் வரப் போகும் பாக்ஸர் 150 ... சேவையை விரிவுபடுத்துகிறது கார்ப்பரேசன் பேங்க் சேவையை விரிவுபடுத்துகிறது கார்ப்பரேசன் பேங்க் ...
அசோக் லேலண்ட் விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2011
15:49

புதுடில்லி : இந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம், மே மாதத்தில், விற்பனை 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010ம் ஆண்டின் மே மாதத்தில், தங்கள் நிறுவனம் 6502 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும், 2011ம் ஆண்டின் மே மாதத்தில், 5725 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. இது சதவீதத்தின் அடிப்படையில், 11.95 சதவீதம் குறைவு ஆகும். உள்ளநாட்டு விற்பனையும் 14.92 சதவீத அளவிற்கு சரிவு கண்டுள்ளது. இந்தாண்டின் மே மாதத்தில் 5082 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. கடந்தாண்டின் மே மாதத்தில் இது 5973 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. விற்பனை சரிவடைந்துள்ள போதிலும், நிறுவனத்தின் ஏற்றுமதி ஏற்றம் பெற்றிருப்பது நிறுவனத்தை சற்று நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது. நிறுவன ஏற்றுமதி இந்த ஆண்டின் மே மாதத்தில் 21.55 சதவீதம் அதிகரித்து 643 என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டின் மே மாதத்தில் இது 529 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கனரக கமர்ஷியல் மற்றும் நடுத்தர வாகனங்களின் விற்பனை இந்த மே மாதத்தில் 14.38 சதவீதம் சரிவடைந்து 5043 யூனிட்களாக உள்ளதாக (கடந்தாண்டு மே மாதத்தில் 5890) அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)