தொடர்ந்து சரிகிறது வெங்காய ஏற்றுமதிதொடர்ந்து சரிகிறது வெங்காய ஏற்றுமதி ... சர்க்கரை உற்பத்தி 2.45 கோடி டன்னாக உயர்வு சர்க்கரை உற்பத்தி 2.45 கோடி டன்னாக உயர்வு ...
வசந்தத்தை தேடும் சந்தன மாலை தொழில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
02:37

மாலைகள் என்பது இந்திய கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தவை. பிறப்பு முதல் இறப்பு வரை பல கட்டங்களில் வாழ்வோடு தொடர்பு கொண்டவை. செல்வந்தருக்கு பிறக்கும் குழந்தையின் கழுத்தில் தங்க மாலை (செயின்) விழும். அதுவே, ஏழைக் குழந்தையின் கழுத்தில் திருஷ்டி நீக்கும் கருமணி கயிறாக காட்சியளிக்கும்.இறைவன் வழிபாடு, பிறந்தநாள், பாராட்டு விழா, திருமணம், சடங்கு சம்பிரதாயங்களில் மலர் மாலைகளே பிரதானம். அவற்றின் ஆயுள், அதிகபட்சம் ஒரு நாள்தான். ஆனால், சந்தன மாலைகள் அப்படி அல்ல. பல மாதங்களுக்கு மனம் மயங்கும் மணம் பரப்பக் கூடியவை. அப்படிப்பட்ட சந்தன மாலை, சரிகை மாலை, மணி மாலை உள்ளிட்ட பலதரப்பட்ட மாலைகளுக்கு தமிழக அளவில் பிரசித்தி பெற்ற இடமாக சென்னை சிந்தாதரிப்பேட்டை திகழ்கிறது.இங்குள்ள ஐயா முதலித் தெருவில், இவ்வகை மாலைகளை தயாரிப்பதில் பட்ணுல்காரர்கள் என்றழைக்கப்படும், புஜ சத்திரிய கத்திரி வகுப்பினர் பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாராகும் சரிகை, சந்தனம், மணி மாலைகள் ஆந்திரா,கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் என, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.'வருடத்தின் முதல்தேதி, பொங்கல்,தீபாவளிபோன்ற பண்டிகைக் காலங்களிலும், தைப்பூசம், கந்த சஷ்டிபோன்ற முருகனுக்கு உகந்த விழாக் காலங்களில் சந்தன மாலைகள் விற்பனை ஜரூராக நடைபெறும். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள முருகன்கோவில்களுக்கும் லட்சக்கணக்கில் மாலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஏலக்காய் மாலை, திராட்சை மாலை, அத்திப்பழ மாலை, ஜவ்வாது மாலை, லவங்க மாலை, கற்பூர மாலை ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன' என்கிறார் பாலாஜிலேஸ் கார்லேண்டு உரிமையாளர் பி.கே.காசி ஷா.படித்து முடித்ததும், பரம்பரைத் தொழிலுக்கு வந்து விட்ட இவர், மூன்றுபேருக்குநேரிடையாகவும், 50 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். ”ற்றுப் பகுதியைசேர்ந்த பல இல்லத்தரசிகள், இவரிடம் சந்தன சரங்களையும், மணிகளையும் பெற்றுச் சென்று, வீட்டில் அவற்றை மாலையாககோர்த்து திரும்ப அளித்து வருவாய் ஈட்டி வருகின்றனர். 'இந்த பகுதி நேர பணியில் சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 40 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். வாரத்தில் 5 நாள்களுக்கு பணி இருக்கும். இதுபோல், பலதரப்பட்ட மணிகளைகோர்த்து தரும் பணியை நம்பி 500 க்கும்மேற்பட்டோர் உள்ளனர்' என்கிறார் காசி ஷாஒரு சந்தன மாலை 25ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சரிகை மாலை 4,000 ரூபாய் முதல் 25ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. குஜராத்தின் சூரத் நகரில் இருந்து தாமிர சரிகைகள் வரவழைக்கப்பட்டு, இங்கு அவற்றுக்கு வெள்ளி முலாம் பூசப்படுகிறது. பின்னர், இவை கைதேர்ந்த கலைஞர்களின் கைவண்ணத்தில், ஜொலிக்கும் சரிகை மாலைகளாக உருமாறுகின்றன.'ஆனால் சரிகை உள்ளிட்ட மூலப்பொருள்கள் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதால், சரிகை மாலைகளுக்கு மவுசுகுறைந்து விட்டது. விசேஷ ஆர்டரின்பேரிலேயே அவை தயாரிக்கப்படுகின்றன. சரிகைக்கு மாற்றாக சந்தன மாலைகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. எம்.ஜி.ஆர் காலத்தில் தான் சந்தன மாலைகளுக்கு மவு” அதிகரித்தது. அவருக்கு ஜவ்வாது, லவங்கம்,நெல் மாலைகள் மிகவும் பிடிக்கும். அதனால், அவருக்கு அணிவிப்பதற்காக, மணம் கமழும் இவ்வகை மாலைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்வார்கள்' என நினைவு கூர்கிறார் காசி ஷாசந்தன மாலைகளை எப்படி மலிவு விலையில் வழங்க முடிகிறது என்றகேள்விக்கு, விரிவாக விளக்கமளிக்கிறார் குரு ராகவேந்திராலேஸ் கார்லேண்ட்ஸ் உரிமையாளர் எச்.வசந்தகுமார். 'சந்தன மாலை என்பது 100 சதவீதம் சந்தன மரத்தில் செய்யப்படும் மாலைகள் அல்ல. சந்தன மரக் கட்டைகளை இழைக்கவும், பொருள்களை செய்யவும்தான் பயன்படுத்த முடியும். மாலைகள் தயாரிக்க முடியாது. அவ்வாறு காணப்படும் சந்தன மாலைகள், அதே வண்ணம் கொண்ட மரச் சருகுகளால் தயாரிக்கப்பட்டு, சந்தன தைலம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுக்கும் நாங்கள் தயாரிக்கும் சந்தன மாலைகளுக்கும் வித்தியாசம் உள்ளது' என்கிறார் இவர்.'தமிழகத்தில், தஞ்சாவூரில் உள்ள வெளார் என்ற கிராமத்தில் தான், சந்தன மணிகள் தயாரிக்கப்படுகின்றன. மரவில்லை மாவுடன் (மரத்தூள்) சில பொருள்களை குழைத்து, வார்ப்பட முறையில் மஞ்சள் வண்ணம் கொண்ட சின்னஞ் சிறு சந்தன மணிகள் உருவாக்கப்படுகின்றன. இவை மணிகளாகவும், சரங்களாக வும் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய மணிகளை வாங்கி,கோர்த்து, அலங்கார வில்லைகளைநேர்த்தியாக அமைத்து, கண்ணைக் கவரும் மாலைகளாக உருவாக்குகிறோம். இந்த மாலைகள் மீது சந்தன தைலத்தை ஸ்பிரே செய்கிறோம். சந்தன மணிகள், சந்தன தைலத்தை முழுவதுமாக ஈர்த்துக் கொள்ளும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் படுவதால், அவை பல மாதங்களுக்கு நிலையான சந்தன வாசத்தை வெளிப்படுத்துகின்றன' என தொழில் ரகசியத்தை போட்டு உடைக்கிறார் வசந்த குமார். வடநாட்டில் சந்தன மாலைகள் மட்டுமின்றி 'லைட்டிங்' மாலைகளும் பிரபலம். மார்வாடி மக்களின் திருமணங்களில் இடம்பெறும் இந்த வகை மாலைகளுக்கு ராஜஸ்தானில் அதிக வரவேற்பு உள்ளது. இதுபோன்ற மாலைகள் மட்டுமின்றி, திருப்பதி பிரம்மோத்சவ விழாவின்போது பெருமாளுக்கு அணிவிக்கப்படும் பட்டு நூலால் ஆன பவித்திர மாலை, விசேஷ நாரில் கோர்க்கப்படும் ஏலக்காய் மாலை ஆகியவற்றையும் சிந்தாதரிப்பேட்டை வியாபாரிகள் வழங்கி வருகின்றனர்.மேலும், இப்பகுதிகோவில் குடைகள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. ஆடி,புரட்டாசி மாதங்களில் குடைகள் அதிகம் விற்பனையாகின்றன. நேர்த்திக் கடனை நிறைவேற்றவும்,கோவில் திருவிழாக்களுக்கும் 6 முதல் 16 ஜாண் (4-10அடி) வரை பலதரப்பட்ட குடைகளுக்கு இங்கு ஆர்டர்கள் குவிகின்றன. இவை 4,000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இது தவிர,கோவில் தேர்களை அலங்கரிக்கும் தொம்பை, ஜாலர், குஞ்சம், விரிப்புகள்,நோன்பு கயிறுகள் என பலதரப்பட்ட பொருள்களும் இங்கு தயாராகின்றன.சரிகை,சந்தன மணி மாலை, குடைகள் தயாரிக்கும் தொழில், வம்சாவழியாக வருவதால், தொழில் நுணுக்கத்தை நன்கறிந்த 20 குடும்பங்களே இதில் ஈடுபட்டுள்ளன. மாதம் சராசரியாக 1-2 லட்ச ரூபாய் விற்றுமுதலை ஈட்டக் கூடிய வாய்ப்புள்ள இத்தொழிலில்,போட்டி காரணமாக லாப வரம்பு குறைந்து வருவதாக கூறுகின்றனர் இத்துறையில் உள்ளோர். மேலும், புதிய தலைமுறையினருக்கு இதில் ஆர்வமில்லாத நிலை உள்ளதால், நசிந்து வரும் இத்தொழிலை காப்பாற்ற, அர” உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.சந்தன,மணி மாலை வர்த்தகத்தில் ஈடுபட 10,000 ரூபாய் முதலீடு இருந்தால்போதும். தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, முனைப்புடன் செயல்பட் டால் இத்தொழிலில் வெற்றி பெறலாம். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இதற்கு வர்த்தக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சிந்தாதிரிப்பேட்டைஎழும்பூர் - சென்ட்ரல் - அண்ணாசாலை என்ற முக்கோணப் பரப்பின் மையமான இங்கு, ஒரு காலத் தில் அதிக அளவில் நெசவாளர்கள் வசித்துள்ளனர். சிறிய தறிகள் நிறைந்த ஊர் என்பதால் சின்ன தறிப்பேட்டை என்ற ழைக்கப்பட்ட இப்பகுதி, காலப்போக்கில் சிந்தாதிரிப்பேட்டையாக மருவி விட்டது. சில அரசியல்வாதிகள், தங்கள் கைங்கர்யமாக இந்த பெயரை சுருக்கி 'சிந்தை' என்ற அடைமொழியுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். புஜ சத்ரிய கத்திரி வம்சம்மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியில் வந்த இவர்கள், அவரது மறைவிற்குப் பிறகு, முகலாய ஆட்சியாளர்களுக்கு அஞ்சி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்கள்பே”ம் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. ஆனால், கர்நாடகாவில் ஹூப்ளி, கடாக், தர்வார் பகுதியில் வசிப்பவர்கள், எழுத்து வடிவை பயன்படுத்துகின்றனர் பள்ளி, கல்லூரிகளிலும் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. - ஏ.கே.விஜய்தேவ் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)