ரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சிரப்பர் உற்பத்தி 5.4 சதவீதம் வளர்ச்சி ... 'சென்செக்ஸ்' 151 புள்ளிகள் சரிவு 'சென்செக்ஸ்' 151 புள்ளிகள் சரிவு ...
பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
00:10

புதுடில்லி: பருப்பு வகைகள் உற்பத்தியில், இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்று விடும் என்பதால், இறக்குமதிக்கு அவசியம் இருக்காது என்று மத்திய அர” தெரிவித்துள்ளது.மத்தியவேளாண் அமைச்சகம், 2010 -11ம் பயிர் பருவத்தில், ஜூலை 19ம்தேதிவரையிலான காலத்தில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.அதில், பருப்பு வகைகள் உற்பத்தி, இதுவரை இல்லாத சாதனையாக 1.81கோடி டன் என்ற அளவை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஏப்ரல் மற்றும் பிப்ரவரியில் வெளியிடப்பட்ட, 2வது மற்றும் 3வது முன்கூட்டிய மதிப்பீட்டை விட அதிகமாகும். இதற்கு முன், கடந்த 2003-04ம் ஆண்டில் பருப்பு வகைகள் உற்பத்தி,1.49கோடி டன் என்ற அளவை எட்டியது தான் சாதனையாக இருந்தது. இந்நிலையில், பயன்படுத்தப்படாத நிலங்களில், விவசாயம் செ#வதன் மூலமாகவும், ஊடு பயிர் திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாகவும், மிகச் ”லபமாக பருப்பு வகைகள் உற்பத்தியை 2கோடி டன் என்ற அளவிற்கு உயர்த்தலாம் என, மத்தியவேளாண் துறை செயலர் பி.@க. பா” தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். எனவே பருப்பு இறக்குமதிமேற்கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் கூறினார்.கடந்த 2009-10ம் நிதியாண்டில், இந்தியா 10ஆயிரத்து390கோடி ரூபாய்மதிப்பிற்கு, 37 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்தது. எனினும், சென்ற 2010-11ம் நிதியாண்டில், பருப்பு இறக்குமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறை@ய 27 லட்சம் டன் மற்றும் 7,386கோடி ரூபாய்என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இ@த காலத்தில், உள்நாட்டில், கடலைப் பருப்பு,பயத்தம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பயிர் பருவத்தில், பருப்பு வகைகள் மட்டுமின்றி, மொத்த உணவு தானியங்கள் உற்பத்தியும் மதிப்பீட்டை விட உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டில், அண்மையில் முடிவடைந்த 2010-11ம் பருவத்தில், உணவு தானியங்கள் உற்பத்தி 24.16கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நெல் உற்பத்தி 9.53கோடி டன் என்ற அளவிலும்,கோதுமை உற்பத்தி 8.60கோடி டன் என்ற அளவிலும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதர தானியங்கள் உற்பத்தி 4.20கோடி டன் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில், மக்காச்சோளம் (2.13கோடி டன்), கம்பு (1கோடி டன்),சோளம் ( 67.40 லட்சம் டன்) ஆகியவற்றின் உற்பத்தி அடங்கும்.பருப்பு வகைகளில், துவரம்பருப்பு உற்பத்தி 29 லட்சம் டன்னாகவும், கடலைப் பருப்பு 82 லட்சம் டன் என்ற அளவிலும், பயத்தம் பருப்பு மற்றும் உளுத்தப்பருப்பு உற்பத்தி முறை@ய 18 லட்சம் டன் மற்றும் 17 லட்சம் டன் என்ற அளவிலும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எண்ணெய்வித்துக்கள் உற்பத்தி 3.11கோடி டன் என்ற அளவிற்கு இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடலை உற்பத்தி 75.38 லட்சம் டன்னாகவும், கடுகு உற்பத்தி 77 லட்சம் டன் என்ற அளவிலும் இருக்கும்.சோயாபீன் மற்றும் ‹ரியகாந்தி உற்பத்தி முறை@ய 1.27 கோடி டன் மற்றும் 63 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாடு, உணவு தானியங்கள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளபோதிலும், பருத்தி உற்பத்தியில் பின்னடைவை கண்டுள்ளது. 2வது மற்றும் 3வது முன்கூட்டிய மதிப்பீட்டில் பருத்தி உற்பத்தி, 3.40கோடி பொதிகளாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது, 4வது முன்கூட்டிய மதிப்பீட்டில், 3.34கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என்று குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.பருத்தி ஆ@லாசனை வாரியம், பருத்தி உற்பத்தி 3.12 கோடி பொதிகள் என்ற அளவில்தான் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. எனினும், இந்த அளவை விட உற்பத்தி குறையும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்தியவேளாண் அமைச்சகத்தின் 4வது முன்கூட்டிய மதிப்பீட்டில், கரும்பு உற்பத்தி 33.92கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 3வது முன்கூட்டிய மதிப்பீட்டில் 3.40கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சணல் உற்பத்தி 99.95 லட்சம் பொதிகள் (ஒரு பொதி=180 கிலோ) என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2வது மற்றும் 3வது முன்கூட்டிய மதிப்பீட்டில், முறை@ய 94 லட்சம் பொதிகள் மற்றும் 99 லட்சம் டன் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)