அன்னிய பரஸ்பர நிதி திட்டங்களில் வருவாய் அதிகரிப்புஅன்னிய பரஸ்பர நிதி திட்டங்களில் வருவாய் அதிகரிப்பு ... உணவுப் பொருள் பணவீக்கம் 8.04 சதவீதமாக உயர்வு உணவுப் பொருள் பணவீக்கம் 8.04 சதவீதமாக உயர்வு ...
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சிறந்த சேவை வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2011
00:14

மும்பை: வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்குவதற்கான பல்@வறு சீர்திருத்தங்களை, வங்கி வாடிக்கையாளர் @சவை குழு, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. 'செபி'யின் முன்னாள் தலைவர் தா@மாதரன் தலைமையிலான வங்கி வாடிக்கையாளர் @சவைக்கான உயர்மட்ட குழு, வங்கித் துறையில் மேற்கொள்ள @வண்டிய பல்வேறு சீர்த்திருத்தங்கள் குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கியிடம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன :வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கொடுத்து, மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்ள @வண்டும். அனைத்து வங்கிகளும், காசோலை, ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட வசதிகளுடன், குறைந்த இருப்பு தொகைக்கான, வரம்பை நிர்ணயிக்காமல் அடிப்படை சேமிப்பு கணக்கை வழங்க வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு, பலதரப்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து கொடுக்கின்றன. ஆனால், அத்தனை @சவைகளையும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதில்லை. அதனால், வாடிக்கையாளர் விருப்பத்தின் @பரில் மட்டும், வங்கிகள் ஒருங்கிணைந்த @சவைகளை வழங்கலாம்.வங்கி கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைந்தால், அதற்கு வங்கிகள் அபராதம் வ‹லிக்கின்றன. இது, வங்கிக்கு வங்கி வேறுபடுகிறது. இனி, ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைந்தால், அது குறித்த தகவலை வாடிக்கையாளருக்கு வங்கிகள் தெரிவிக்க @வண்டும். @மலும், வங்கிக் கணக்கில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை விட எந்த அளவிற்கு பணம் குறைவாக உள்ள@தா, அதற்கு மட்டுமே, அதற்கான சதவீதத்தின் அடிப்படையில் அபராதம் வ‹லிக்க @வண்டும்.வங்கிகள், குறித்த கால வைப்புத் தொகைக்கு (பிக்சட் டெபாசிட்) கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி, வாடிக்கையாளர்களை கவர்கின்றன. இனி, அனைத்து வங்கிகளும், குறிப்பிட்ட காலத்திற்கான வைப்புத் தொகையில், ஆண்டுக்கணக்கில் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டும். இது, அதிக அளவில் வருவாய் தரும் வங்கிகளின் திட்டங்களை @தர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு துணைபுரியும்.வங்கிகள், வாடிக்கையாளரின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, அவரது டெபாசிட்டுகளை தன்னிச்சையாக புதுப்பிக்கக் கூடாது. மேலும், டெபாசிட்டுக்களுக்கான காப்பீட்டு வரம்பை ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 5 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும்.ஒரு வாடிக்கையாளர், தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு பதிலாக, அ@த வங்கியின் @வறு கிளைகளில் ஒரு சில வங்கிச் சேவைகளை @மற்கொள்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி புத்தகத்தில், கணக்கு வரவு வைப்பது உள்ளிட்ட சில செயல்பாடுகள், தகவலை அறிவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், பிற கிளைகளில் இது போல் @மற்கொள்ளப்படும் @சவைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பது முறையாகாது. இத்தகைய சேவைகளை வங்கிகள் கட்டணமில்லாமல் வழங்க @வண்டும்.ஏ.டி.எம்., கார்டு காணாமல் போகும்பட்சத்தில், எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுந்தகவல் @சவை மூலம் வாடிக்கையாளர் தகவல் அனுப்பினால், உடனடியாக வங்கிக் கணக்கை முடக்க வேண்டும். வாடிக்கையாளரின் கவனக்குறைவால், ஏ.டி.எம்., கார்டு மூலம் பணமோசடி நடைபெற்றதாக கூறும்பட்சத்தில், அதை வங்கிகள் நிரூபிக்கவேண்டும்.ஏ.டி.எம்.,மில் பணம் வராமல் @பானா@லா, போலி கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தாலோ, இன்டெர்நெட் வாயிலான வங்கிச் சேவையில் @மாசடி நடைபெற்றாலோ, வங்கிகள் உடனடியாக வாடிக்கையாளரிடம் உறுதிமொழி பெற்று, தற்காலிக ஏ.டி.எம்., அட்டையை வழங்க @வண்டும். வாடிக்கையாளர்கள் புகார்களை தெரிவிக்க, அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான இலவச தொலைபேசி அழைப்பு எண் வழங்க வேண்டும். இந்த எண்ணை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் சேவை மையத்திற்கு அழைப்புகள் திருப்பி விடப்படும் வசதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கிளையிலும், வாடிக்கையாளர் குறைகளை தீர்ப்பதற்காக உயரதிகாரியை நியமிக்க @வண்டும்.வங்கிகளின் பொறுப்பில் உள்ள சொத்து ஆவணங்கள் காணாமல் போனாலோ அல்லது தாமதமாக ஒப்படைக்கப்பட்டாலோ, அதற்கான இழப்பீட்டை வங்கிகள் வழங்க வேண்டும்.மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியத்தை, அவர்கள் வீட்டிலே@ய பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். @மலும், ஓய்வூதியதாரர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை கொண்ட எந்த கிளைகளிலும் செலுத்தும் வசதியை செய்து தர வேண்டும்.வீட்டு வசதிக் கடன்களை பொறுத்தவரை, வட்டி விகிதத்தில் பழைய வாடிக்கையாளர், புதிய வாடிக்கையாளர் என்ற பாகுபாட்டை வங்கிகள் கைவிட வேண்டும். வீட்டு வசதிக் கடனை முன்கூட்டி@ய முடித்துக் கொள்வோருக்கு, பெருந்தொகையை அபராதமாக வசூலிக்க கூடாது. வாடிக்கையாளர் கேட்காமலேயே, அவரது வீட்டு வசதிக் கடன் மற்றும் நிலுவைத் தொகை குறித்த ஆண்டு கணக்கு அறிக்கையை வங்கிகள் தாமாகவே வழங்க @வண்டும். வாடிக்கையாளர்சேவையில், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து இந்திய வங்கிககள் நடைமுறை தர நிர்ணய வாரியம், தர நிர்ணயம் செய்ய @வண்டும். வங்கிச்சேவைக்கான குறைந்தபட்ச தர நிர்ணயத்தையும் வெளியிட வேண்டும்.வங்கித் துறையில்மேற்கண்ட பல்வேறு சீர்திருத்தங்களை வங்கி வாடிக்கையாளர் சேவைக்கான உயர்மட்டக் குழு, ரிசர்வ் வங்கியிடம் வழங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், தங்களுடைய கருத்துக்களை இம்மாதம் 27ம் தேதிக்குள், இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)