ஏ.டீ.டி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் மின்னணு பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது : ஏ.கே.விஜய்தேவ்ஏ.டீ.டி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் மின்னணு பாதுகாப்பு வர்த்தகத்தை ... ... வரும் 2015ம் காலண்டர் ஆண்டில் மருத்துவ சுற்றுலா துறை வருவாய் ரூ.11,000 கோடியை எட்டும் வரும் 2015ம் காலண்டர் ஆண்டில் மருத்துவ சுற்றுலா துறை வருவாய் ரூ.11,000 கோடியை ... ...
சுகுணா பவுல்ட்ரி பார்ம் புதிய கால்நடை தீவனம், உயிரி உரம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:03

உடுமலை: சுகுணா கறிக்கோழி நிறுவனம், புதிய கால்நடை தீவனம் மற்றும் உயிரி உரத்தை, கோவை கொடீசியாவில் நடந்த, விவசாய கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. கோவையில், தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், சுகுணா பவுல்ட்ரி நிறுவனம், இந்தியாவின், 11 மாநிலங்களில் செயல்பாடுகளை கொண்டுள்ளன. ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வரும் இந்நிறுவனம், பிராய்லர், லேயர் பார்மிங், குஞ்சு பொரிப்பகம், தீவன ஆலைகள், பிராசசிங் ஆலைகள், தடுப்பு மருந்து மற்றும் ஏற்றுமதி என கோழிப்பண்ணை தொழிலின் அனைத்து பிரிவுகளிலும் முழுமையான செயல்பாடுகளை கொண்டுள்ளது. சவுதிஅரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், கத்தார் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம், உள்நாட்டில் சிக்கன் விற்பனைக்காக நவீன சில்லரை விற்பனை நிலையங்களை சங்கிலித் தொடராக கொண்டுள்ளது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் நிபுணத்துவம் கொண்டுள்ள இந்நிறுவனம், தற்போது புதிய கால்நடை தீவனத்தையும், விவசாய பயிர்களுக்கான உயிரி உரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சுகுணாஸ் கேட்டில் பீட், புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை தேவையான அளவு, கலந்து தயாரிக்கப்பட்டுள்ளதால், பால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.கால்நடைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, தேவையான முதல் தரமான புண்ணாக்கு, பருப்பு வகைகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், புதிய தீவனத்தில் இருப்பதால், பால் உற்பத்தி திறன் மற்றும் பால் சுரக்கும் காலத்தை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும், பாலில் உள்ள கொழுப்பு, எஸ்என்எப்., ஆகியவையும் அதிகரிக்கிறது.புதிய உயிரி உரம்: வேளாண்துறை சம்பந்தப்பட்ட, மூன்றாண்டு கால ஆராய்ச்சிக்கு பிறகு, சுகுணா நிறுவனம் சக்தி வாய்ந்த உயிரி உரத்தை தயாரித்துள்ளது. இந்த உரம், பயிர்கள் ஆரோக்கியமாக வளரவும், பூச்சிகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தவும் உதவுகிறது. சுகுணாஸ் உயிரி உரம் (பயோ மேன்யூர்) மண் வளத்தை அதிகரிக்கவும், மண்ணின் நீர் உறிஞ்சும் திறனை மேம்படுத்தி மகசூல் அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த உரத்தை அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ, 5 கிலோ மற்றும் 50 கிலோ என மூன்று விதமான பேக்குகளில் இந்த உரம் கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய தயாரிப்புகளையும், கோவை கொடீசியாவில் நடந்த விவசாய கண்காட்சியில், சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 08,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)