பதிவு செய்த நாள்
09 ஆக2011
00:05
சென்னை: லட்சுமி விலாஸ் பேங்க், நடப்பு 2011 - 12ம் நிதியாண்டின், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 24.58 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 5 சதவீதம் (23.39 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின், மொத்த வருவாய் 34.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 274.99 கோடியிலிருந்து, 369.94 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வங்கியின் வட்டி வருவாய், 248.07 கோடியிலிருந்து, 335.77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வங்கியின், செயல்பாட்டு லாபம், 29.72 சதவீதம் உயர்ந்து, 69.72 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த வணிகம் 20,206 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதில், வங்கி வழங்கிய கடன்கள், 8,258 கோடி ரூபாயாகவும், திரட்டிய டெபாசிட், 11,844 கோடி ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|