நாட்டின் அன்னியச் செலாவணி  கையிருப்பு ரூ.8,388 கோடி சரிவுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.8,388 கோடி சரிவு ... தேயிலை ஏல மைய விற்பனையில் தொடரும் விலை சரிவு தேயிலை ஏல மைய விற்பனையில் தொடரும் விலை சரிவு ...
பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து 3.33 லட்சம்பேர் விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2011
04:05

மும்பை:பங்குச்ச ந்தை வீழ்ச்சியால் செ ன்ற ஜூலை மாதம், பங்குகள் மற்றும் பங்குச õர்ந்தசே மிப்பு திட்டங்களில் இருந்து 3.33 லட்ச ம் முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால், இவ்வகை திட்டங்களை நிர்வகித்து வரும் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அவை நிர்வகிக்கும் சொத்து மதிப்பும் வெகுவாகச ரிவடைந்துள்ளது. இவ் வாண்டு தொடக்கத்தில் இருந்‌தே, இந்திய பங்குச்சந்தை சரிவைச ந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், ஒரு நாள் ஏறுவதும், ஒன்பது நாள் இறங்குவதுமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள் ÷ ளாரை நிலை குலைய வைத்துள்ளது.இந்நிலையில், ஐ‌ரோப்பிய நாடுகளின் கடன்சுமை, அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு பிரச்னை, கடன் தகுதி குறைக்கப்பட்டதுபோன்றவற்றால்,சர்வதேசபங்குச்ச ந்தைகள் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. இதன் தாக்கம் இந்திய பங்குச்ச ந்தைகளிலும் எதிரொலித்து, மும்பை பங்குச்ச ந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 17ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ளது. இந்த வீழ்ச்சி காரணமாக, பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள், பங்குசார்ந்த சேமிப்பு திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், இவ்வகை திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் பெரும் இழப்பைச ந்திக்கநேர்ந்துள்ளது.வீழ்ச்சி கண்ட பங்குச்ச ந்தை எப் போது எழுச்சி காணும் என்று தெரியாததால், ஏராளமான முதலீட்டாளர்கள், பங்குச õர்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து வெளி யேறி வருகின்றனர். இந்த வகையில் செ ன்ற ஜூலை மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச õர்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் செய்திருந்த முதலீட்டை, 3 லட்ச த்து 33ஆயிரம்பேர் திரும்பப் பெற்றுள்ளனர்.இதனால் முதலீட்டாளர் கள் மட்டுமின்றி, பரஸ்பர நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் மீதான வருவாயில் பெரும்பகுதி, பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகிப்பதன் மூலம் கிடைக்கிறது.மேலும், இவ்வகை திட்டங்களின் மீதுமேற்கொண்டுள்ள முதலீட்டில், சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு 99ச தவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 7 லட்ச த்து 35ஆயிரம்பேர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,சராசரியாக ஒரு மாதத்தில் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர், பங்குச õர்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து வெளி‌யே றியுள்ளனர். இந்த எண்ணிக்கை, செ ன்ற நிதியாண்டின் இதே காலத்தில் 1 லட்ச த்து 50 ஆயிரம்பேர் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.சென்ற நிதி யாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் 18 லட்ச த்திற்கும் அதிகமான முதலீட்டாளர்களை இழந்துள்ளன. நடப்பு நிதியாண்டில், இந்த எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், நான்காம் காலாண்டில் பங்குச்ச ந்தையின் போக்கைப் பொறுத்தே, இது குறித்து உறுதியாக கூற முடியும் என்று, இத்துறையைசேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.சென்ற ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 3கோடியே 94 லட்ச த்து 39ஆயிரத்து 302 ஆக இருந்தது. இது, நடப் பாண்டு, மார்ச் மாதத்தில், 3கோடியே 92 லட்ச த்து 90 ஆயிரத்து 289 ஆக குறைந்திருந்தது. ஜூன் மாதத்தில் இதுமேலும் குறைந்து, 3கோடியே 88 லட்ச த்து 88 ஆயிரத்து 309 ஆகவும், ஜூலையில் 3 லட்ச த்து 85ஆயிரத்து 54ஆயிரத்து 545 ஆகவும்சரிவடைந்துள்ளது.செ ன்ற மார்ச் மாதத்தில், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்திருந் தோர் எண்ணிக்கை, 4கோடியே 72 லட்ச த்து 33ஆயிரத்து 262 என்ற அளவில் இருந்தது. இதில், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மிக அதிக அளவாக, அதாவது 3கோடியே 92 லட்ச த்து 90 ஆயிரத்து 289பேர் முதலீடு மேற் கொண்டி ருந்தனர். இந்த எண்ணிக்கை, வருவாய்பிரிவில் 45 லட்ச த்து 27ஆயிரத்து 435 ஆகவும்,பேலன்ஸ்டு' திட்டங்களில் 27 லட்ச த்து 77 ஆயிரத்து 217 என்ற அளவிலும் இருந்தது. இது,'ஈ.டி.எப்' திட்டங்களில் 4 லட்ச த்து 22 ஆயிரத்து 801 என்ற அளவிலும், 'பண்ட்ஸ் ஆப் பண்ட்ஸ்' திட்டங்களில் 2 லட்ச த்து 15ஆயிரத்து 520 ஆகவும் இருந்தது.செ ன்ற ஜூலை மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பலதரப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்திருந்தோர் எண்ணிக்கை 4கோடியே 68 லட்ச த்து 94 ஆயிரத்து 801 என்ற அளவில் குறைந்துள்ளது. இதில், பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங் களில் முதலீடு செய்துள்‌ளோர் எண்ணிக்கை 3கோடியே 85 லட்ச த்து 54 ஆயிரத்து 545 என்ற அளவில் இருந்தது. இந்த எண்ணிக்கை, வருவாய்பிரிவில் 48 லட்ச த்து 49 ஆயிரத்து 552 ஆகவும், ' பேலன்ஸ்டு' திட்டங்களில் 27 லட்ச த்து 56 ஆயிரத்து 954 என்ற அளவிலும் இருந்தது. முதலீட்டாளர் எண்ணிக்கை,'ஈ.டி.எப்' திட்டங்களில் 54 லட்ச த்து 10ஆயிரத்து 768 என்ற அளவிலும், 'பண்ட்ஸ் ஆப் பண்ட்ஸ்' திட்டங்களில் 2 லட்ச த்து 22 ஆயிரத்து 982 ஆகவும் இருந்தது.இதே மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து 869கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.'எச்.டீ.எப்.சி டாப் 200', ரிலையன்ஸ் குரோத், எச்.டீ.எப்.சி ஈக்யுட்டி, பிராங்ளின் இந்தியா புளுசிப் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் டைனமிக் உள்ளிட்ட திட்டங்கள் மீதான வருவாய், 8-25ச தவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)