பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:08
சென்னை: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், ' டாட்டா விஸ்டா' என்ற புதிய வகை பிரிமியம் காரை அறிமுகம் செய்துள்ளது. அதிக சக்தி கொண்ட இன்ஜின், சிறந்த வடிவமைப்பு, நேர்த்தியான மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.டீசலில் இயங்கும் காரில் 1,300 சிசி திறன் கொண்ட குவாட்ராஜெட் இன்ஜின், பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோலில்இயங்கும் கார்களில், 1,400 சிசி திறன் கொண்டசபையர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இப்புதிய வகை கார்களில், மென்மையான கிளட்ச் மற்றும் கியர் செயல்பாடு, மேம்படுத்தப்பட்ட பிரேக் பிடிக்கும் திறன் மற்றும் இலகுவான ஸ்டீயரிங் ஆகியவை முக்கியமான அம்சங்களாக உள்ளன.டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் கார்கள் லிட்டருக்கு முறையே, 22.3 கி.மீ மற்றும் 16.7 கி.மீ மைலேஜ் தரக்கூடியவை. டீசல் காரின் விலை, 4.79 லட்சம் ரூபாயிலிருந்தும், பெட்ரோல் காரின் விலை 3.88 லட்சம் ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது.6 வண்ணங்களில் உள்ள இப்புதிய வகைகார்கள், வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|