அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,360 கோடி அதிகரிப்புஅன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,360 கோடி அதிகரிப்பு ... நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலத்தில்  ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 22 சதவீதம் சரிவு நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலத்தில் ஆயுள் காப்பீட்டு ... ...
பங்கு வியாபாரம்: சாண் ஏறினால்... முழம் சறுக்குகிறது...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
03:46

வாரத்தின் தொடக்கம், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனால், கடைசி மூன்று வர்த்தக தினங்கள், மிகவும் மோசமாக இருந்தன. இதுநாள் வரை, 'சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடையாமல் இருந்தது. ஆனால், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று, 'சென்செக்ஸ்' 16,000புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சிகண்டது. இதற்கு, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் விலை குறைந்ததும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை, மிகவும் சரிவடைந்ததும் தான் முக்கிய காரணம்.வெள்ளியன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 297 புள்ளிகள் சரிவடைந்து, 15,848 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 91 புள்ளிகள் குறைந்து, 4,747 புள்ளிகளிலும் நிலைபெற்றன. பணவீக்கம்: நாட்டின் தற்போதைய பணவீக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதாவது, ஒரு சாரார், நடுத்தர வருவாய் பிரிவினரின் வருமானத்துடன், ஒப்பிட்டு பார்க்கும் போது, பண வீக்கம் சரியான அளவில் தான் உள்ளது என்கின்றனர். அதனால், வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மேலும், உயர் த்த வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர்.ஆனால், ரிசர்வ் வங்கி, பணவீக்கம் குறையவில்லை என்றால், அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறுகிறது. இதை வைத்து பார்க்கையில், வரும் செப்டம்பரில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு, வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் நிலையில், அது, பங்கு சந்தையை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும்.உணவுப் பொருள் பணவீக்கம், ஆகஸ்ட் 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில், 9.08 சதவீதமாக குறைந்திருந்தது. உணவுப் பொருள் பணவீக்கம், இரட்டை இலக்கத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், ரிசர்வ் வங்கி அதன் ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை நிச்சயம் அதிகரிக்கும். வங்கிப் பங்குகள்: வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள், தொடர்ந்து கூடி வருவதால், வரும், காலங்களில், வங்கிகளின் வசூலாகாத கடன் அளவு அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வங்கி பங்குகளின் விலை, கடந்த ஒரு வருட காலத்தில், பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. இந்த விலையிலும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவைப் பொறுத்து, இத்துறை பங்குகளை வாங்கலாம். மருந்து துறை நிறுவனங்கள்: பங்குச் சந்தை தொடர்ந்து, வீழ்ச்சி கண்டு வரும் தற்போதைய சூழ்நிலையிலும், மருந்து துறை நிறுவனப் பங்குகளின் விலை, அதிகம் சரிவடையாமல், தாக்குப்பிடிக்கின்றன. இத்துறையில், சிறப்பாக செயல்படும், நிறுவனங்கள் குறித்து ஆராய்ந்து முதலீடு செய்யலாம். விமான சேவை நிறுவனங்கள்: விமான சேவை நிறுவனங்களின் செயல்பாடு, சொல்லும் அளவிற்கு இல்லை. இத் துறையில் ஈடுபட்டு வரும் சில நிசறுவனங்கள் அதிக இழப்பைசந்தித்து வருகின்றன.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 2,000 கோடி ரூபாய் திரட்டும் வகையில், உரிமைப் பங்குவெளியீட்டை மேற் கொள்ள முடிவு செய்துள்ளது. விலை சரியான அளவில் நிர்ணயித்தால், இதன் உரிமைப் பங்கு வெளியீடு வெற்றி காணும். சர்க்கரை துறை நிறுவனங்கள்: மத்திய அரசு, கூடுதலாக, 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை, சிறிது உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், இத்துறையில் ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை அதிக ஏற்ற, இறக்கம் கண்டு வருகின்றன. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய வெளியீடுகள்: தற்போதைய சந்தையிலும், ஒரு சில நிறுவனங்களின் புதிய வெளியீடுகள் வந்து கொண்டுள்ளன. சிறப்பான நிறுவனங்கள் என்றாலும்,முதலீட்டாளர்களின் ஆதரவு குறைவாகவே உள்ளது.ஏனெனில்,பங்குச்சந்தை களில் பட்டியலிடப்படும் போது, வெளியீட்டு விலையை விட குறைந்து போகிறது. இதனால், சில்லரை முதலீட் டாளர் கள், மூலதனச் சந்தையில் முதலீடு செய்வதற்கே அச்சப்படுகின்றனர்.பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளி யீடுகளும் தொடர்ந்து ஒத்திப் போடப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு,பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற் பனை வாயிலாக, திரட்ட திட்டமிடப்பட்டிருந்த தொகை கிடைக்காமல் உள்ளது. கடன் பத்திரங்கள்: தற்போதுள்ள சூழ்நிலையில், முதலீட்டாளர்கள், சில நிறுவனங்கள் வெளியிடும் பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 12 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. தற்போதைய நிலையில் இந்த அளவிற்கு, வேறு எந்த முதலீட்டிற்கும் வருவாய் கிடைப்பதில்லை. எனவே, முதலீட்டாளர்கள் சிறந்த நிறுவனங்களின், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். தங்கம்: சென்ற வியாழனன்று,தங்கத்தின் விலை, கடுமையாக சரிவடைந்து போனது.10 கிராம் தங்கத்தின் விலை, 1,800 ரூபாய் குறைந்து போனது. இதை சாதகமாக பயன்படுத்தி, பலர் தங்கத்தை வாங்கத் தொடங்கினர். இதனால், வெள்ளி யன்று, 10 கிராமிற்கு 900 ரூபாய் வரை உயர்ந்தது. தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி குறியீடு, குறைக்கப்பட்டதும் காரணமாகும். வரும் வாரம் எப்படிஇருக்கும்? அமெரிக்காவை தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் கடன் தகுதி குறியீடும் குறைக்கப் பட் டது. இது, சந்தைகளை சிறிது ஆட்டம் காண செய்தது. இது, போன்று மேலும் சில நாடுகளின், தரக் குறியீடும் குறைக்கப் படுமானால் அது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.ஒட்டு மொத்தத்தில் வரும் வாரத்திலும், பங்கு வர்த்தகம் அதிக தடுமாற்றத்துடன் இருக்குமென்றே தோன்றுகிறது. பங்குகளின் விலை குறைந்திருப்பதால், சராசரி செய்ய விரும்பு பவர்கள் மற்றும் சிறிய அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தவிர மற்றவர்கள் ஒதுங்கி இருப்பதே நல்லது. சேதுராமன் சாத்தப்பன்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)