தொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் மும்பை பங்குச்சந்தைதொடர்ந்து 3வது நாளாக ஏற்றத்தில் மும்பை பங்குச்சந்தை ... பஜாஜ் ஆட்டோ  நிறுவனம் புதிய 'பாக்சர் 150 சி.சி.' பைக் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய 'பாக்சர் 150 சி.சி.' பைக் ...
மாருதி சுசூகி இந்தியா வாகன விற்பனை 13 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
03:06

புதுடில்லி:நாட்டின் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 12.74 சதவீதம் சரிவடைந்து, 91 ஆயிரத்து 442 கார்களாக உள்ளது. இந்த விற்பனை, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 791 ஆக அதிகரித்து காணப்பட்டது. மானேசரில் உள்ள இதன் தொழிற்சாலையில், தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால், கார் தயாரிப்பு முடங் கிப் போனது. இதன் காரணமாக, ஆகஸ்ட் மாத விற்பனை குறைந்துள்ளது என, இந்நிறுவனம் தெரிவித் துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டில் இதன் கார் விற்பனை, 16.82 சதவீதம் குறைந்து, 77 ஆயிரத்து 86 ஆக சரிவடைந் துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 92 ஆயிரத்து 674 ஆக உயர்ந்திருந்தது. அதேசமயம், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 18.48 சதவீதம் அதிகரித்து, 12 ஆயிரத்து 117 என்ற எண்ணிக்கை யிலிருந்து, 14 ஆயிரத்து 356 ஆக உயர்ந்துள்ளது.உள்நாட்டில், நிறுவனத்தின் மொத்த பயணிகள் கார் விற்பனை 19.21 சதவீதம் குறைந்து, 78 ஆயிரத்து 351 என்ற எண்ணிக்கை யிலிருந்து, 63 ஆயிரத்து 296 கார்களாக சரிவடைந்துள்ளது. இந் நிறுவனத்தின் சிறிய வகையைச் சேர்ந்த, எம்800,ஆல்டோ மற்றும் வேகன்ஆர் கார் விற்பனை, 37 ஆயிரத்து 496 ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 18.34 சதவீதம் (45 ஆயிரத்து 917 கார்) குறைவாகும். இதுதவிர, எஸ்டிலோ, ஸ்விப்ட், மற்றும் ரிட்ஸ் உள்ளிட்ட காம்பாக்ட் வகை கார்கள் விற்பனையும், 26.93 சதவீதம் குறைந்து, 21 ஆயிரத்து 955 என்ற எண்ணிக்கையிலிருந்து, 16 ஆயிரத்து 43 ஆக சரிவடைந்துள்ளது. அதேபோல், டிசையர் வகை கார்களின் விற்பனையும், 6.82 சதவீதம் சரிவை சந்தித்து, 8,431 லிருந்து, 7,856 ஆக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் நடுத்தர வகையைச் சேர்ந்த செடன் எஸ்எக்ஸ்4 கார் விற்பனையும், 7.57 சதவீதம் குறைந்து, 2,048 லிருந்து, 1,893 ஆக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)