பதிவு செய்த நாள்
04 செப்2011
03:50
சென்னை : ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் நிறுவனம், கேரளாவின் தேக்கடியில் 'உட்ஸ் அண்டு ஸ்பைஸ்' என்ற பெயரில், சுற்றுலா விடுதியை திறந்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் 15வது சுற்றுலா விடுதியாகும். இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் ராமநாதன்கூறியதாவது: நிறுவனம், நாட்டின் 12 முக்கிய சுற்றுலா தலங்களில், பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலா விடுதிகளை அமைத்துள்ளது. இயற்கை எழில் ‹ழ்ந்த தேக்கடியின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், 54 அறைகளைக் கொண்ட விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதில், களிமண் விடுதிகள், மரக்குடில்கள், பழங்குடி குடியிருப்பு உள்ளிட்டவை அடங்கும். சுற்றுலாப் பயணிகள், சுகமாக பொழுதைக் கழிப்பதற்காக, நீச்சல் குளம், ஆரோக்கிய பராமரிப்பு மையம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்வாறு ரமேஷ் ராமநாதன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|