டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்புதிய 'டாட்டா விஸ்டா' கார் அறிமுகம்டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம்புதிய 'டாட்டா விஸ்டா' கார் அறிமுகம் ... கயிறு பொருள்கள் ஏற்றுமதிரூ.4,000 கோடிக்கு இலக்கு கயிறு பொருள்கள் ஏற்றுமதிரூ.4,000 கோடிக்கு இலக்கு ...
நெயய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்ரூ.40,000 கோடியில் அனல் மின்நிலையங்கள் அமைக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
00:20

சென்னை:நெயய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாயய் முதலீட்டில் 7,500 மெகா வாட் திறனில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம்,சீர்காழியில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் அமைக்க என்.எல்.சி இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2,000 மெகாவாட் வீதம் இரு கட்டங்களாக, 20 ஆயிரம் கோடி ரூபாயய் முதலீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இந்த மின் நிலைய திட்டத்திற்குத் தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நிர்வாக ரீதியிலான அனுமதி கோரி, தமிழக அர”க்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மின்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் போது, தமிழக மின் தொகுப்பிற்கு கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் நெயய்வேலியில் 1,000 மெகாவாட் அனல் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவும் என்.எல்.சி திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 600 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்திற்கு மாற்றாக, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 5,907 கோடி ரூபாயய் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. என்.எல்.சி., உத்தரபிரதேசத்தின் கான்புர்நகர் மாவட்டத்தில், கதாம்புர் தெசில் என்ற இடத்தில் 2,000 மெகாவாட் மின் திட்டத்தை அமைக்க உள்ளது. இதற்காக, இந்நிறுவனம், உத்தரபிரதேச ராஜ்ய வித்யூத்உத்படம் நிகம் (யு.பி.ஆர்.வி.யு. என்.எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செயய்து கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து புதிய நிறுவனத்தின் சழ் மின்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த புதிய நிறுவனத்தில் என்.எல்.சி 51 சதவீத பங்கையும், யு.பி.ஆர்.வி. யு.என்.எல் 49 சதவீத பங்கையும் கொண்டிருக்கும். 10,000 கோடி ரூபாயய் முதலீட்டிலான இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு உத்தரபிரதேச அர” கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இது தொடர்பான, திட்ட ஆயய்வறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இது குறித்து என்.எல்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 ஆயிரம் கோடி ரூபாயய் மதிப்பிலான இந்த மின்திட்டங்களுக்கு சென்ற ஜூன் மாதம், மத்திய அர” அனுமதி வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் வரும் 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ராஜஸ்தான் மாநிலம் பித்னோக் பகுதியில் ஆண்டிற்கு 23 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி ”ரங்கத்துடன் கூடிய 250 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தையும் செயல்படுத்த என்.எல்.சி முடிவு செயய்துள்ளது. 2,293 கோடி ரூபாயய் செலவில் மேற்கொள்ளக்கூடிய இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களை, தனியாரிடம் இருந்து கையகப்படுத்துவதற்கு ராஜஸ்தான் அர” ஒப்புதல் அளித்துள்ளது.எனினும், குத்தகை அடிப்படையில் ”ரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, ராஜஸ்தான் அரசிடம்அனுமதி கோரப்பட்டுள்ளதாக என்.எல்.சி தெரிவித்துள்ளது.இது தவிர, பார்சிங்கர் விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 250 வாட் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செயய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது, தற்போதைய பார்சிங்கர் மின் நிலையத்தின் விரிவாக்கத் திட்டமாக இருக்கும். இங்கு அமைக்கப்படும் அனல் மின் திட்டத்திற்கு தேவையான நிலக்கரி, ஹால்டா மற்றும் பலானா ”ரங்கங்களில் இருந்து பெறப்பட உள்ளது.இதற்காக, இந்த ”ரங்கங்களில் இருந்து நிலக்கரியை மின்நிலையத்திற்கு அனுப்புவதற்கான வழித்தடம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களுக்கான மொத்த செலவு 2,042 கோடி ரூபாயய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு என்.எல்.சி இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.அனைத்து திட்டங்கள் வாயிலாக, தேசிய மின் உற்பத்தியில், கூடுதலாக 7,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிசினஸ் ஸ்டாண்டர்ட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)