அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.20,163 கோடி குறைந்ததுஅன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.20,163 கோடி குறைந்தது ... ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீடு ஒத்திவைப்பு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2வது பங்கு வெளியீடு ஒத்திவைப்பு ...
முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.8.94 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
01:36

புதுடில்லி : நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில், சென்ற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான இரு வார காலத்தில், 8 லட்சத்து 94 ஆயிரத்து 783 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை விட, 113 சதவீதம் (4 லட்சத்து 18 ஆயிரத்து 581 கோடி ரூபாய்) அதிகமாகும். நடப்பு நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, நாட்டின் முன்பேர சந்தைகளில் 62 லட்சத்து 6 ஆயிரத்து 139 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற 2010- 11ம் நிதியாண்டின், இதே காலத்தில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 830 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், சென்ற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான இரு வார காலத்தில், முன்பேர சந்தைகளில், வேளாண் விளைபொருள்கள் மீது, 88 ஆயிரத்து 340 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான காலத்தில் வேளாண் விளைபொருட்களின் ஒட்டுமொத்த வர்த்தகம், 6 லட்சத்து 78 ஆயிரத்து 233 கோடி ரூபாயாக இருந்தது. இது,சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், முறையே 58 ஆயிரத்து 183 கோடி ரூபாயாகவும், 4 லட்சத்து 35 ஆயிரத்து 283 கோடி என்ற அளவிலும் இருந்தது. மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொண்ட இருவார காலத்தில், தங்கம், வெள்ளி மீதான முன்பேர வர்த்தகம், 5 லட்சத்து 58 ஆயிரத்து 470 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான காலத்தில், 36 லட்சத்து 15 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கு முன்பேர வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலங்களில், முறையே 1 லட்சத்து 55 ஆயிரத்து 904 கோடி ரூபாய் மற்றும் 16 லட்சத்து 75 ஆயிரத்து 463 கோடி ரூபாய் என்ற அளவிலும் இருந்தது. மதிப்பீட்டு காலத்தில் தங்கம்,வெள்ளி நீங்கலாக, இதர உலோகங்கள் மீதான வர்த்தகம், முறையே 1 லட்சத்து 4 ஆயிரத்து 924 கோடி ரூபாய் மற்றும் 9 லட்சத்து 43 ஆயிரத்து 445 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலங்களில் முறையே 1 லட்சத்து 9 ஆயிரத்து 429 கோடி ரூபாய் மற்றும் 9 லட்சத்து 56 ஆயிரத்து 439 கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில் எரிபொருள் மீதான முன்பேர வர்த்தகம், முறையே 1 லட்சத்து 43 ஆயிரத்து 47 கோடி ரூபாய் மற்றும் 9 லட்சத்து 68 ஆயிரத்து 479 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலங்களில் முறையே 95 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மற்றும் 7 லட்சத்து 23 ஆயிரத்து 632 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில், இதர விளைபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம் முறையே 6 லட்ச ரூபாய் மற்றும் 8 லட்ச ரூபாய் என்ற அளவிற்கு இருந்தது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலங்களில் முறையே 1 கோடியே 2 லட்ச ரூபாய் மற்றும் 11 கோடியே 82 லட்ச ரூபாய் என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)