பதிவு செய்த நாள்
27 செப்2011
02:29
புதுடில்லி:சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து நேற்றும் சரிவை கண்டது. 10 கிராம் தங்கம் விலை 600 ரூபாய்குறைந்து 26 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 500 ரூபாய்குறைந்து 53 ஆயிரம் ரூபாயாக சரிவடைந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதும், கிரீஸ் நாட்டின் கடன் நெருக்கடிக்கு சுமூக தீர்வு காணப்படாத தாலும், தங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீடு சரிவடைந்து வருகிறது. சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கடந்த நான்கு வர்த்தக தினங்களில், ஒரு பவுனுக்கு 1,472 ரூபாய்வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் லண்டன் முன்பேர சந்தையில் கடந்த மூன்று வர்த்தக தினங்களில் தங்கத்தின் விலை 10 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. ஆக மூன்று நாள் வர்த்தகத்தில் மட்டும் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை சரிவடைந்து ஒரு அவுன்ஸ் 1,621 டாலர் என்ற அளவில் விலை போனது. மும்பை மற்றும் சென்னையில், நேற்று 10 கிராம் தங்கத்தின் விலை முறையே 630 மற்றும் 565 ரூபாய்குறைந்து 26 ஆயிரத்து 985 மற்றும் 26 ஆயிரத்து 485 ரூபாய்என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|