உலக காபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 4ம் இடம்உலக காபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 4ம் இடம் ... நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு ...
நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2011
01:18

நடப்பு 2011-12ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நுகர்பொருள் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 9-10 சதவீத அளவிற்கே இருக் கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி, சென்றாண்டு இதே காலத்தில், 14-15 சதவீதமாக இருந்தது.பண வீக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்பொருள் துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சந்தையில் ஒரு நிறுவனத்தின் பிராண்டுக்கு சிறப்பான பெயர் இருந்தால், விலையை உயர்த்தினாலும், அதனால் விற்பனை பாதிக்காது' என, மாரிக்கோ நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தற்காலிக மதிப்பீட்டின்படி, இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, சென்ற ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான, 4 மாதங்களில், 26.3 சதவீதம் உயர்ந்து, 984 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்தில் நிகர விற்பனை, 1.6 சதவீதம் உயர்ந்து, 72.7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதே காலங்களில் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் நிகர விற்பனை 14.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,345 கோடி ரூபாயாகவும், நிகர விற்பனை, 14 சதவீதம் உயர்ந்து, 599 கோடியே, 40 லட்ச ரூபாயாகவும் இருக்கும்.ஐ.டி.சி நிறுவனத் தின் நிகர விற்பனை, 17.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,948 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 18.5 சதவீதம் அதிகரித்து, 1,478 கோடி ரூபாயாகவும் உயரும். இதே காலத்தில், நெஸ்லே நிறுவனத்தின் நிகர விற்பனை, 17.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,928 கோடி ரூபாயாகவும், கர லாபம் 20.4 சதவீதம் உயர்ந்து, 263 கோடி ரூபாய் என்ற அளவிலும் இருக்கும்.தாபர் நிறுவனத்தின் நிகர விற்பனை, 23.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,202 கோடி ரூபாயாகவும், நிகர விற்பனை, 8 சதவீதம் உயர்ந்து, 173 கோடி ரூபாய் என்ற அளவிலும் இருக்கும். கோல்கேட் நிறுவனத்தின் நிகர விற்பனை, 13.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 625 கோடி ரூபாயாகவும், நிகர விற்பனை, 7.2 சதவீதம் அதிகரித்து, 107 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதே காலத்தில், ஜி.சி.பி.எல் நிறுவனத்தின் நிகர விற்பனை, 14.5 சதவீதம் உயர்ந்து, 1,091 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 8.9 சதவீதம் உயர்ந்து, 143 கோடி ரூபாய் என்றளவிலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், மதிப்பீட்டு காலத்தில், நுகர்பொருள் நிறுவனங்களின் நிகர விற்பனை மற்றும் நிகர லாபம் வளர்ச்சி கண்டாலும், அது சென்ற நிதியாண்டின் இதே காலத்திய வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, குறைவாகவே இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)