பதிவு செய்த நாள்
16 அக்2011
11:29

உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை சராசரியை விட, 30 சதவீதம் எகிறியுள்ளது.தமிழகம் முழுவதும், 6,690, "டாஸ்மாக்' சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு 50 கோடி ரூபாய் வரை சரக்குகள் விற்பனையாகின. ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால், சரக்கு விற்பனை எகிறியுள்ளது. தேர்தலுக்காக, நேற்று மாலை 5 மணி முதல், 19ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. ஓட்டு எண்ணிக்கை தினமான 21ம் தேதியும் விடுமுறை. இதனால், சரக்குகளை பதுக்கும் வேலைகள் கடந்த ஒருவாரமாக அதிகரித்துள்ளது.கடந்த 15 நாட்களில் மட்டும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்குகள் விற்பனை நடந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 91 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை ஆகியுள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, சராசரியைவிட சரக்கு விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 70 சதவீதம் வரை பிராந்தி, ரம் வகைகள் விற்பனையாகியுள்ளது. தேர்தலுக்குப்பின், தீபாவளி வருவதால், விற்பனை மேலும் அதிகரிக்கும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|