பதிவு செய்த நாள்
16 அக்2011
12:42

தேனி :நூல் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் இத்தொழிலை நம்பி உள்ள 9 கோடி பேர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்இந்தியா முழுவதும் 3150 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3.80 கோடி ஸ்பிண்டில்கள் உள்ளன. 2000க்கும் அதிகமான ஜின்னிங் பாக்டரிகள் உள்ளன. ஆண்டிற்கு 3 கோடி பேல் பருத்தி தேவைப்படுகிறது. விளைச்சல் 3 கோடியே 9 லட்சம் பேல்களாக உள்ளது. (ஒரு பேல் 175 கிலோ) உலக நூல் தேவையில் இந்தியாவில் மட்டும் 18 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 9 கோடிபேர் ஈடுபட்டுள்ளனர்.(தமிழகத்தில் 25 லட்சம் பேர்)பாதிப்பு: மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் நூல் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது. இதனால் இந்திய மில்கள் நூல் சப்ளை செய்த ஆர்டர்களை தற்போது சீனா, பாகிஸ்தான், தாய்லாந்து நாட்டை சேர்ந்த வியாபாரிகள் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் நூல் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்கினாலும், மார்க்கெட் கிடைக்காமல் மில் நிர்வாகங்கள் தவிக்கின்றன.நூல் விலை தரத்திற்கு ஏற்ப கிலோவிற்கு 80 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. ஒரு கண்டி பருத்தி 32 ஆயிரம் ரூபாய்க்கு மில்கள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கண்டி (ஒரு கண்டி பருத்தி 355.62 கிலோ) பருத்தி 42 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. தேனி வர்த்தக சங்க செயலாளர் நடேசன் கூறுகையில்,"பருத்தி விலை அதிகரித்து, நூல் விலை குறைந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நூல்கள் தேங்கியுள்ளன. மில் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் தர முடியாத நிலையில் உள்ளன. பருத்திக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த விலையை விட தற்போது இரண்டரை மடங்கு அதிக விலைக்கு பருத்தி விற்கப்படுகிறது. முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு, பருத்தி ஏற்றுமதியை தடுத்து பருத்தி விலையை குறைக்க வேண்டும்,'என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|