பதிவு செய்த நாள்
19 அக்2011
00:17

புதுடில்லி:நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 26.50 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 43.4 சதவீதம் குறைவாகும். உலக ளவில், இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியா, மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படும் சில மாநிலங்களில், ஏற்பட்ட மழைப்பொழிவு மற்றும் இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடைவிதிப்பு போன்றவற்றால், இதன் ஏற்றுமதி குறைந்து போயுள்ளதாக, இந்திய தாதுப்பொருட்கள் கூட்டமைப்பு வெளியிட் டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்ரல் - ஆகஸ்ட்), நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 24.38 சதவீதம் சரிவடைந்து, 2.80 கோடி டன்னாக குறைந்து போயுள்ளது. குறிப் பாக, அதிகளவில் இரும்புத்தாது உற்பத்தி செய்து வரும், கர்நாடக மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட்டின் தடையால், இதன் உற்பத்தி தடைப்பட்டு போனது.இருப்பினும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இரும்புத்தாது ஏற்றுமதி, 9 லட்சத்து 34 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 8 லட்சத்து 55 ஆயிரம் டன்னாக இருந்தது. இதே மாதங்களில், மேற்குவங்கம் ஹால்டியா துறைமுகத்திலிருந்து, மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 4 லட்சத்து 4 ஆயிரம் டன்னிலிருந்து, 4 லட்சத்து 22 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.அதேசமயம், ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 12.68 லட்சம் டன்னிலிருந்து, 5 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று, கோவா துறைமு கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியும், 6 லட்சத்து 81 ஆயிரம் டன்னிலிருந்து, 3 லட்சத்து 89 ஆயிரம் டன்னாக குறைந்து போயுள்ளது. ஏற்றுமதி வரி உயர்வு மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரிப்பும் , இரும்புத்தாது ஏற்றுமதி குறைந்து போனதற்கு முக்கியக் காரணம். மேலும், உள்நாட்டு உருக்கு உ ற்பத்தி நிறுவனங்களின் நலன் கருதி, மத்திய அரசு, இரும்புத்தாது மீதான ஏற்றுமதி வரியை, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில்,5 சதவீதத்திலிருந்து, 20 சதவீதமாக அதிகரித்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட், கர்நாடாக மாநிலம், தும்கூர், பெல்லாரி மற்றும் சித்திரதுர்கா மாவட்டங்களிலுள்ள சுரங்கங்களில் இருந்து, இரும்புத்தாது வெட்டி எடுப்பதற்கு தடைவிதித்துள்ளது. இருப்பினும், பொதுத்துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி., நிறுவனம் பெல்லாரி மாவட்ட சுரங்கங்களிலிருந்து மாதம் ஒன்றுக்கு, 10 லட்சம் டன் இரும்புத் தாது வெட்டி எடுத்துக் கொள்ள இந்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டில், மிக அதிகளவில் கோவா மாநிலத்திலிருந்து இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு சட்டத்திற்கு புறம்பாக இரும்புத்தாது வெட்டி எடுப்பது குறித்து, ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு குழு ஒன்றை, அமைத்துள்ளது. இக்குழு, அதன் ஆய்வு அறிக்கையை அடுத்த, 45 தினங்களுக்குள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுபோன்ற பல்வேறு காரணங்களால், நடப்பு 2012ம் ஆண்டில், நாட்டின் இரும்புத்தாது ஏற்றுமதி, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 25 சதவீதம் வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|