பதிவு செய்த நாள்
19 அக்2011
00:19

சென்னை:கனரா வங்கியின் துணை நிறுவனமான, கேன் பின் ஹோம்ஸ், வீட்டு வசதி திட்டங்களுக்கு, நிதியுதவி அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்திற்கு நாடு தழுவிய அளவில்,47 கிளை கள் உள்ளன.இந்நிறுவனம்,அதன் வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக, நடப்பு 2011-12ம் நிதி யாண்டின் இறுதிக்குள், கிளைகளின் எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அண்மையில்,இந்நிறுவனம் பெங்களூர்-உத்தரஹல்லி, ஓசூர்,தும்கூர் மற்றும் சென்னை-அம்பத்தூர் ஆகிய இடங் களில், கிளைகளைத் தொடங்கியுள்ளது.வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி, குண்டூரில் கிளையைத் தொடங்க உள்ளது. இதுதவிர, வரும் ஜனவரி மாதத்தில், புதிதாக நான்கு கிளைகள் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது என, இந்நிறுவனத் தின் நிர்வாக இயக்குனர் சி.இளங்கோ தெரிவித்தார். கேன் பின் ஹோம்ஸ் நிறுவனம், வீடு கட்டுவதற்கும், தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற் கும், நிதியுதவி அளிப்பதுடன், வீடுகளைப் பராமரிப்பதற்கும், புதுப்பித்துக் கொள்வதற்கும், கடன் வழங்கி வரு கிறது. கடந்த 1987ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இதுவரையிலுமாக, 7,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வீட்டு வசதி கடன் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, 2 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்துள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நிறுவனம் வீட்டு வசதி கடனுக்கு வழங்கிய ஒப்புதல் மற்றும் அளிக்கப்பட்ட கடன்கள், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட முறையே, 30 சதவீதம் மற்றும் 15 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, இளங்கோ மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|