பதிவு செய்த நாள்
19 அக்2011
00:22

சென்னை:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுலா மற்றும் விருந்தோம் பல் துறைகள், குறிப்பிடத்தக்க பங் களிப்பை வழங்கி வருகின்றன. ஆண்டுதோறும் இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, அதி கரித்து வருகிறது. அதுபோன்று,விருந்தோம்பல் துறையில் ஏராளமான புதிய ஓட்டல்களும் உருவாகி வருகின் றன.நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு,அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் இந்த இரண்டு துறைகளும், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, மத்திய ”ற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரப் பேரவை, நடப்பாண்டின் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளது. அதில், ஆசியப் பிராந்தியத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில், இந்தியா 12வது இடத்தில் உள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடுகளுள், இந்தியா 68வது இடத்தில் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய சேவைத் துறையாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் விளங்குகின்றன.இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத் தியில், இத் துறை களின்பங்களிப்பு, 6.23 சதவீதமாகவும், வேலைவாய்ப்பில், 8.78 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. சென்ற 2009ம் ஆண்டில்,இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 51லட்சத்து70ஆயிரம் என்ற அள வில் இருந்தது. இது, 2010ம் ஆண்டில் 55 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011ம் ஆண்டின், சென்ற ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்திய சுற்றுலாத் துறை, 7.2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் , இதே காலத்தில், 4.9 சதவீதமாக இருந்தது.வரும் 2018ம் ஆண்டிற்குள், நாட்டின் சுற்றுலாத்துறை, 9.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்தில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையால், இந்தியசுற்றுலாத்துறை, 27 ஆயிரத்து 550 கோடி டாலர் வருவாய் ஈட்டும் என, மத்திய சுற்றுலா அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இந்தியாவிற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு தலங்கள், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து இழுக்கின்றன. இது தவிர, தாஜ்மகால் உள்ளிட்ட புகழ்பெற்ற வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண, டில்லி,ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் கோவா போன்ற மாநிலங்களுக்கும், அதிக அளவில் வெளிநாட்டினர் வருகின்றனர். படகு வீடுகளில் பொழுது போக்கவும்,ஆயுர்வேத மூலிகை சிகிச்சைகளுக்காகவும், பலர் கேரளாவில்சுற்றுப் பய ணம் மேற்கொள்கின்றனர்.வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைந்த செலவில்,பல்வேறு இடங் களைக் கண்டு ரசிக்க முடிகிறது என்பதாலும், அயல் நாட்டினரின் வருகை அதிகரித்து வருகிறது. உலக ”ற்றுலா குறித்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில், 2007ம் ஆண்டு நிலவரப்படி, நியாயமான செலவில்,சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 6வது இடத்தில் உள்ளது. அதே சமயம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, 39வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் எத்தகைய நோய்களுக்கும் குறைந்த செலவில், சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதும், இந்தியா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுத்துள்ளது.இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற, ஆண்டுதோறும்,1 லட்சத்திற்கும் மேற்பட்டோர், அயல்நாடுகளில் இருந்து வருகின்றனர். மருத்துவச் சுற்றுலாத் துறையின் மதிப்பு, 31 கோடி டாலர் என கணிக்கப்பட்டுள்ளது.இத்துறை, சராசரியாக 30 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இத்துறையின் ஆண்டு வளர்ச்சி, 15 - 20 சதவீதமாக இருந்தது. இந்திய சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை யும், சலுகைகளையும் வழங்கி வரு கிறது.உதாரணமாக, சுற்றுலாத் துறை சார்ந்த ஓட்டல்களை அமைக்க, 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படு கிறது.மேலும், ஜப்பான், பின்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர்,லக்சம்பர்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியா வந்தவுடன் சுற்றுலா விசா பெற்றுக் கொள்ளும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ,சுற்றுலாவிற்கு ஏற்றதாக, 37 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவ்விடங்களை, சகல வசதிகளுடன் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளும்,சுற்றுலாத் துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களைக் கொண்டுள்ள உத்தரகண்ட் அரசு, பொழுதுபோக்கு பூங்காக்கள், பன்னடுக்குத் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு, 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்துள் ளது. ராஜஸ்தான் அரசு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஓட்டல்களில் தங்குவதற்கான சொகு” வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாகக் குறைத்துள்ளது.மேலும் தமிழ்நாடு, கேரளா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள் ளிட்ட பல மாநில அரசுகள், தனியார் பங்களிப்புடன் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|