பதிவு செய்த நாள்
01 நவ2011
10:51

மதுரை : கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கி, மேலும் பல கிளைகளை திறப்பதன் மூலம் வங்கிச் சேவையை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் 108வது உதயநாளை முன்னிட்டு, அக்டோபர் 31ம் தேதி மதுரையில் வங்கியின் 280வது கிளை திறக்கப்பட்டது. மதுரையில், 280வது கிளையை திறந்துவைத்த பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி கூறியதாவது, வங்கி, விரைவில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை திறக்க உள்ளது. மிக விரைவில் சென்னையில், பூந்தமல்லி மற்றும் சேலையூர் மற்றும் நெய்வேலியில் கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிதியாண்டில், 62 கிளைகளை அமைப்பதற்கான உரிமததை, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளது. தற்போதைய அளவில், தங்கள் வங்கி சார்பில் 283 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்குள்ளாக், மேலும் 17 கிளைகளை அமைத்து கிளைகளின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தங்கள் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 25 ஆயிரம் கோடி என்ற அளவிலும், இதில், டெபாசிட்களின் மூலம் பெறப்பட்ட தொகை ரூ. 14,500 கோடி என்றும், எஞ்சிய தொகை அட்வான்ஸ்களின் மூலம் பெறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் வசதிக்காக, தங்கள் வங்கியின் பெரும்பாலான கிளைகள் கிராமங்கள் மற்றும் கிராமங்களை சார்ந்த பகுதிகளில் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவி்த்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|