பதிவு செய்த நாள்
01 நவ2011
16:13

புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் தங்கள் நிறுவன வாகன விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2010ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், தங்கள் நிறுவனம் 37,251 வாகனங்களை விற்பனை செய்திருந்ததாகவும், இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தங்கள் நிறுவனம் 47,240 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது , சதவீதத்தின் அடிப்படையில் 26.82 சதவீதம் உயர்வு ஆகும். உள்ளூர் சந்தையில், விற்பனை 31,791 என்ற அளவிலிருந்து 38,229 என்ற அளவிற்கு அதிகரி்ததுள்ளது. இது, சதவீதத்தின் அடிப்படையில், 20.25 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், 5,460 ஆக இருந்த ஏற்றுமதி அளவு, இம்மாதத்தில் 65.04 சதவீதம் அதிகரித்து 9,011 ஆக பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வ்நததால், வாகனங்களின் விற்பனை அதிகரித்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|