பதிவு செய்த நாள்
01 நவ2011
16:44

புதுடில்லி : ரூபாயின் மதிப்பு குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் துறை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.82 அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த செப்டம்பரில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்துஸ்தான் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன (நிதி பிரிவு) இயக்குனர் பி.முகர்ஜி கூறியதாவது, சர்வதேச சந்தையில், தற்போதைய அளவில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றிற்கு 108 டாலர்கள் என்ற அளவில் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் டாலரின் மதிப்பு இந்திய ரூபாயின் அடிப்படையில் ரூ. 46.50 என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றோ அதன் மதிப்பு ரூ. 50ஐ நெருங்கியுள்ளது. இவ்வாறு பல வழிகளில் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தி்த்து வருகின்றன. தற்போதைய நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 1.50 இழப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து, பெட்ரோல் விலையை லி்ட்டருக்கு ரூ. 1.82 அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக, மற்ற நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவு எடுத்து, விரைவில் பெட்ரோலின் புதிய விலையை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|