பதிவு செய்த நாள்
10 நவ2011
09:26

ராஜபாளையம்:இந்த ஆண்டின் நவ. 11 ம் தேதியை குறிக்கும் 10 ரூபாய் நோட்டை, ராஜபாளையத்தை சேர்ந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஆறுமுகசாமி பாதுகாத்து வருகிறார். ராஜபாளையத்தை சேர்ந்த சேத்தூர் சிறப்பு எஸ்.ஐ., ஆறுமுகசாமி. இவர், ஓய்வு நேரத்தில் பழங்கால நாணயங்கள், ரூபாய் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நாணயங்கள் குறித்து பேசி உள்ளார்.இதுமட்டுமன்றி "பேன்சி எண்' உள்ள ரூபாய் நோட்டுகளையும் சேகரித்து வருகிறார். இதில் 2011ம்ஆண்டு நவம்பர் 11ம் தேதியை குறிக்கும் விதமாக ,ஒரே வரிசையில் ஆறு ஒன்றுகள் வரிசையாக ( 20 பி 111111 ) உள்ள பத்து ரூபாய் நோட்டையும் பாதுகாத்து வருகிறார். ஆறுமுகசாமி கூறுகையில், "" வித்தியாசமான எண்ணாக உள்ளதே என சேகரித்தேன். ஒரே எண் உள்ள நாள், மாதம், ஆண்டு வருவதற்கு நூறு ஆண்டுகள்(11-11-11) காத்திருக்கவேண்டும் என்பது தற்போது தான் தெரிந்தது, ''என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|