பதிவு செய்த நாள்
19 நவ2011
10:10

பெங்களூரு : தொலைதொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஹூவேய் நிறுவனம், குளோபல் நெட்வொர்க் ஆபரேசன் சென்டரை இந்தியாவில் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குளோபல் நெட்வொர்க் ஆபரேசன் சென்டரின் மூலம், சர்வதேச அளவில், பிசினஸ் சொல்யூசன்களை தங்குதடையின்றி வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹூவேய் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் நெட்வொர்க் ஆபரேசன் சென்டர்களின் கட்டுப்பாட்டு மையமாக, இந்த குளோபல் நெட்வொர்க் ஆபரேசன் சென்டர் இருக்கும், இந்த சென்டரின் மூலம், டேட்டா மற்றும் செயல்பாடுகளின் கண்ட்ரோல்கள் ஒருங்கிணைக்கப்பட இருப்பதோடு மட்டுமல்லாமல், நிறுவன சேவைகளை அனைவரும் எளிதிலும் அதேநேரத்தில் தங்குதடையின்றி பெறவும் வழிவகை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூவேய் நிறுவனத்தின் முன்னணி கிளவுட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த குளோபல் நெட்வொர்க் ஆபரேசன் சென்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|