பதிவு செய்த நாள்
25 நவ2011
13:37
சண்கர் : உள்நாட்டு மற்றும் உலக இசை சந்தையில் பஞ்சாப் மியூசிக் நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும், அதனால் அடுத்த 2 ஆண்டுகளில் பஞ்சாப் மியூசிக் நிறுவனத்தின் வளர்ச்சி ரூ.125 கோடியை எட்டும் என சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய இசை சந்தையில் பஞ்சாப் மியூசிக் நிறுவனம் 25 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், இதனால் இனி வரும் காலங்களில் இதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சோனி மியூசிக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய நாடுகளுக்கான தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய இசை சந்தையின் மதிப்பு ரூ.1000 கோடியாகும். இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 20 சதவீதம் ஆகும். மொத்த சந்தையில் பஞ்சாப் மியூசிக் நிறுவன பங்கு மதிப்பு 7 முதல் 8 சதவீதம் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|