பதிவு செய்த நாள்
03 டிச2011
16:16

புதுடில்லி : நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், நவம்பர் மாதத்தில் விற்பனை 53.36 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இததொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில், 2010ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், 5,137 வாகனங்களை விற்பனை செய்த தங்கள் நிறுவனம், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், 7,878 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 53.36 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் 3,885 என்ற அளவில் இருந்த உள்நாட்டு விற்பனை 66.72 சதவீதம் அதிகரி்தது 6,477 ஆக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஏற்றுமதியும், 11.90 சதவீதம் அதிகரி்தது 1,252 என்ற அளவிலிருந்து 1,401 என்ற அளவிற்கு அதிகரி்ததுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|