பதிவு செய்த நாள்
12 டிச2011
00:07
சென்னை: ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில் தேங்காய் மற்றும் கொப்பரைகள் வருவதையடுத்து, தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.தற்போது மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய், 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய், கொப்பரை ஆகியவை வருவதால், கேரளாவிலும் தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இம்மாநிலத்தில், மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய், 80 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.ஆந்திரா மற்றும் கர்நாடகாவில், தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி உபரியாக உள்ளது. மேலும், இம்மாநிலங்களில், தேங்காய் எண்ணெய்க்கான தேவையும் அதிகரிக்கவில்லை. அதனால், வியாபாரிகள், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் மற்றும் கொப்பரைகளை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவிலும் தேங்காய்க்கான தேவை அதிகரிக்காமல் உள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ கொப்பரை விலை, 52 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கேரளாவில், 54 ரூபாயாக உள்ளது.தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், சமையல் எண்ணெய் விலை உயர்வாகவே உள்ளது. மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ பாமாயில் விலை, 58 ரூபாயில் இருந்து, 64 ரூபாயாக உயர்ந்துள்ளது.சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், தேங்காய் எண்ணெய் விலையும் விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|