பதிவு செய்த நாள்
13 டிச2011
00:25

நாட்டின் உருக்கு உற்பத்தித் திறனை, வரும் 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், ஆண்டுக்கு, 6 கோடி டன் என்ற அளவில் உயர்த்த, 2.50 லட்சம் கோடி ரூபாய்முதலீடு தேவை என, மத்திய உருக்கு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் உருக்கு உற்பத்தி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 8.9 கோடி டன்னாக உயரும் என, உருக்குத் துறை செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான குழு மதிப்பீடு செய்துள்ளது.
வரும் 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2012-2017), உருக்கு உற்பத்தி, ஆண்டுக்கு, 6 கோடி டன் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு, வரும் 2016-17ம் நிதியாண்டில், 14.9 கோடி டன் என்ற அளவிற்கு உயரும் என இக்குழு மதிப்பிட்டுள்ளது.இந்த அளவிற்கு உருக்கு உற்பத்தியை அதிகரிக்க, உருக்கு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ள இக்குழு, இதற்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய்முதலீடு தேவைப்படும் என, மதிப்பீடு செ#துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|