பதிவு செய்த நாள்
28 டிச2011
01:53

சென்னை:பிரின்ஸ் ஜுவல்லரி நிறுவனம், சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள அதன் விற்பனையகத்தில் பிரத்யேக பிளாட்டினம் நகை கண்காட்சியை அமைத்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் பிரின்ஸ்சன் ஜோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"பிளாட்டினம் சோல்மேட்ஸ் கலெக்ஷன்' என்ற இந்த கண்காட்சியில், பிளாட்டி னத்தில் பொறிக்கப்பட்ட வைர நகைகள் இடம் பெற்றுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கண் கவரும் விதத்தில் இந்த நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை, காதலர்கள், தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் விதத்தில் பரிசளிக்க ஏற்றவை. வாழ்நாள் முழுவதும் அன்பின் அடையாளச் சின்னமாக காட்சியளிக்கும். நாடு முழுவதும் உள்ள நிறுவனத்தின் விற்பனையகங்களில், பிளாட்டினம் சோல்மேட் கலெக்ஷன்களை வாங்கலாம். இந்த நகைகளின் விலை 12 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|