பதிவு செய்த நாள்
28 டிச2011
01:56

டோக்கியோ:ஜப்பானை சேர்ந்த டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இருவகை எரிசக்தியில் இயங்கும் அதிநவீன "அக்வா' என்ற சிறிய காரை டோக்கியோவில் அறிமுகப்படுத் தியுள்ளது.அமெரிக்காவில் "பிரியஸ் சி' என்ற பெயரில் விற்பனைக்கு வர உள்ள இந்த காரின் விலை 16.9 லட்சம் ஜப்பானிய யென் (21,700 டாலர்) என்ற அளவில் இருந்து துவங்குகிறது. ஜப்பானில், மாதம் 12 ஆயிரம் "அக்வா' கார்களை விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில், இந்நிறுவனத்தின் கலப்பு எரிசக்தி வசதி கொண்ட "பிரையஸ்" கார் விற்பனை, சென்ற ஜூன் வரை யிலான ஆறு மாத காலத்தில் 51 சதவீதம் சரிவடைந்து, 83 ஆயிரத்து 319 ஆக குறைந்துள்ளது.இதற்கு, இவ் வாண்டு துவக்கத்தில் ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பும் காரணம். அதே சமயம், இதே காலத்தில், ஹோண்டாவின், கலப்பு எரிசக்தி வசதி கொண்ட "பிட்' கார் விற்பனை, 2 சதவீதம் மட்டுமே சரிவடைந்து, 88 ஆயிரத்து 282 ஆக உள்ளது.
"பிரையஸ்' காருக்கு கடும் போட்டியாக ஹோண்டாவின் "பிட்' கார் உருவெடுத்துள்ளது. எரிபொருள் சிக்கனத்தில், "பிரையஸ்' காரை விட "பிட்' கார் (லிட்டருக்கு30 கி.மீ.,) குறை வான மைலேஜ் தந்தாலும், அதன் குறைந்த விலை (15.9லட்சம் யென்) தான், விற்பனை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.மேலும், கவர்ச்சிகரமான வடிவம், 1500 சி.சி திறன் கொண்ட ஐ.விடெக் தொழில்நுட்பத்திலான என்ஜின், ஆன்டி லாக் பிரேக் சிஸ்டம் என பல வசதிகளை கொண்டுள்ளது.
கலப்பு எரிசக்தி கார் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, அதிரடியாக களமிறங்கிய டெயோட்டா நிறுவனம், அதன் "பிரையஸ்' காரை விட 22 சதவீதம் குறை வான விலையில் "அக்வா' காரை வெளியிட்டுள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட இந்த காரின் என்ஜின் திறன் 1500 சி.சி. மேலும், விபத்தின் போது, அனைத்து பயணி களையும் பாதுகாக்கும் வசதி கொண்ட ஒன்பது காற்றுப் பைகள், தொடுதிரை தொழில்நுட்பத்தில், "டிவி' இணைய பயன்பாட்டிற்கான வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
"அக்வா' வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய தலைசிறந்த காராக விளங்கும் என டெயோட்டா தெரிவித்துள்ளது.இது, ஹோண்டாவின் "பிட்' கார் விற்பனையை முறியடிக்குமா, இல்லையா என்பது வரும் ஆண்டில் தெரிந்து விடும்.கலப்பு எரிசக்தி கார் விற்பனையில், ஜெனரல் மோட்டார்ஸ், ஹூண்டாய் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், வரும் ஆண்டில் தீவிரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளதால், இச்சந்தையில் போட்டியும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|