பதிவு செய்த நாள்
28 டிச2011
09:58

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.08 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.80 புள்ளிகள் குறைந்து 15854.15 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.65 புள்ளிகள் அதிகரித்து 4762.50 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகளின் சரிவின் காரணமாகவே பங்குச் சந்தைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு சில ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் விடுமுறை காரணமாக வர்த்தகம் நடைபெற வில்லை. இந்தியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில், நேற்று வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. எனினும், பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. நாட்டின் பங்குச் சந்தையில், நேற்று நடைபெற்ற வியாபாரத்தில், மின்சாரம், மோட்டார் வாகனம், எண்ணெய், பொறியியல், வங்கி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து, உருக்கு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|