நாட்டின் ஏற்றுமதி ரூ.1.11 லட்சம் கோடியாக வளர்ச்சிநாட்டின் ஏற்றுமதி ரூ.1.11 லட்சம் கோடியாக வளர்ச்சி ... கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் அதிருப்தி கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் ... ...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
00:07


புதுடில்லி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் மோட்டார் வாகனங்கள் விற்பனை உயர்ந்திருந்தது. அதேசமயம், மாருதி சசூகி, டி.வி.எஸ் மோட்டார் போன்ற ஒரு சில நிறுவனங்களின் வாகன விற்பனை குறைந்துள்ளது. மாருதி சசூகி நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொழிலாளர் பிரச்னையால், கார் உற்பத்தி குறைந்து போனது.
மேலும், வட்டி செலவினம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றால் வாகனங்கள் விற்பனையில் சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிடில், வாகனங்கள் விற்பனை மேலும் அதிகரித்திருக்கும் என இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்தார்.
டாட்டா மோட்டார்ஸ்
இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த பயணிகள் மற்றும் வர்த்தகப் பயன்பாடு வாகனங்கள் விற்பனை, சென்ற டிசம்பரில், 22 சதவீதம் வளர்ச்சி கண்டு 82 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்கள் விற்பனை 76 ஆயிரத்து 663 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2010ம் ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 24 சதவீதம் (61 ஆயிரத்து 685 வாகனங்கள்) உயர்வாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 5,809 என்ற எண்ணிக்கையிலிருந்து, 5,615 ஆகக் குறைந்துள்ளது.மேலும், இந்நிறுவனம் உள்நாட்டில் சென்ற டிசம்பரில், 47 ஆயிரத்து 747 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இந்நிறுவனத்தின், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24 ஆயிரத்து 558 லிருந்து, 29 ஆயிரத்து 500 ஆக உயர்வடைந்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் உயர்ந்து, 17 ஆயிரத்து 428 என்ற எண்ணிக்கையிலிருந்து, 18 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.
போர்டு இந்தியா
மதிப்பீட்டு காலத்தில், போர்டு இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை, 39 சதவீதம் அதிகரித்து, 4,301 லிருந்து, 5,979 ஆக உயர்ந்துள்ளது. சென்ற 2011ம் ஆண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் உயர்ந்து, 96 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. வாகன ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்து, 22 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது.
மாருதி சசூகி இந்தியா
இந்நிறுவனம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில், 92 ஆயிரத்து 161 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாத விற்பனையை விட 7.1 சதவீதம் (99 ஆயிரத்து 225 வாகனங்கள்) குறைவாகும். இதில், உள்நாட்டிற்கான கார்கள் விற்பனை, 13.4 சதவீதம் சரிவடைந்து 89 ஆயிரத்து 469 என்ற எண்ணிக்கையிலிருந்து, 77 ஆயிரத்து 475 ஆகக் குறைந்துள்ளது.
இருப்பினும், இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி, 50.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,756 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14 ஆயிரத்து 686 ஆக உயர்வு கண்டுள்ளது.
நிசான் மோட்டார் இந்தியாசென்ற டிசம்பரில், நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 1,596 ஆக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாத விற்பனையை விட 44 சதவீதம் (1,104 வாகனங்கள்) அதிகமாகும்.
ஜெனரல் மோட்டார்ஸ்
சென்ற டிசம்பரில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 6.74 சதவீதம் வளர்ச்சி கண்டு 9 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில் 8,468 ஆக இருந்தது.
2011ம் காலண்டர் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை 1 லட்சத்து 10 ஆயிரத்து 804 லிருந்து, 1 லட்சத்து 11 ஆயிரத்து 510 வாகனங்களாக
உயர்ந்துள்ளது.
மகிந்திரா அண்டு மகிந்திரா
சென்ற டிசம்பரில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 16 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 16 ஆயிரத்து 334 ஆக இருந்தது.
உள்நாட்டில் டிராக்டர் விற்பனை 1.19 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 ஆயிரத்து 135 லிருந்து, 15 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், டிராக்டர் ஏற்றுமதி 10.43 சதவீதம் சரிவடைந்து, 1,199 லிருந்து, 1,074 ஆகக் குறைந்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்சென்ற டிசம்பர் மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 1 லட்சத்து 70 ஆயிரத்து 428 ஆகக் குறைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 1 லட்சத்து 71 ஆயிரத்து 790 ஆக அதிகரித்து காணப்பட்டது.
சென்ற 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகன விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 லட்சத்து 12 ஆயிரத்து 896 என்ற எண்ணிக்கையிலிருந்து, 16 லட்சத்து 70 ஆயிரத்து 40 ஆக உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 1 லட்சத்து 68 ஆயிரத்து 359 லிருந்து, 1 லட்சத்து 67 ஆயிரத்து 905 ஆக சரிவடைந்துள்ளது.
ஸ்கூட்டர் விற்பனை 7 சதவீதம் வளர்ச்சி கண்டு 41 ஆயிரத்து 804 லிருந்து, 44 ஆயிரத்து 804 ஆக உயர்வு கண்டுள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை 61 ஆயிரத்து 414 லிருந்து, 56 ஆயிரத்து 662 ஆகக் குறைந்துள்ளது.இரு சக்கர வாகன விற்பனை 1 லட்சத்து 49 ஆயிரத்து 357 லிருந்து, 1 லட்சத்து 46 ஆயிரத்து 747 ஆகக் குறைந்துள்ளது. ஏற்றுமதி 6 சதவீதம் வளர்ச்சி கண்டு 21 ஆயிரத்து 121 லிருந்து, 22 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில், இந்நிறுவனத்தின் விற்பனை, 3,431 லிருந்து, 2,523 ஆகக் குறைந்துள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.எஸ்.ஐ.) நிறுவனம் சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 1 லட்சத்து 91 ஆயிரத்து 584 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாத விற்பனையை விட 36 சதவீதம் (1 லட்சத்து 40 ஆயிரத்து 719 வாகனங்கள்) அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)