பதிவு செய்த நாள்
03 ஜன2012
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், 2012ம் புத்தாண்டின், முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று லாபத்துடன் முடிவடைந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. மேலும், பல அன்னிய நிதி நிறுவனங்கள் முழு அளவில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவில்லை.
திங்களன்று மதியம் வரை இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கமின்றி இருந்தது. பங்குச் சந்தையில் தகுதிவாய்ந்த அன்னிய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரச அனுமதிக்க உள்ளதாக செய்தி வெளியானது. எனினும், இதனால் பெரிய அளவில் ஏற்றம் காணப்படவில்லை.
அதேசமயம், இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதனால், மதியத்திற்கு பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. இருப்பினும், நுகர்பொருட்கள், மோட்டார் வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 63 புள்ளிகள் அதிகரித்து, 15,517.92 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 15,542.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 15,358.02 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 12.45 புள்ளிகள் உயர்ந்து, 4,636.75 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 4,645.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,588.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|