தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம்தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம் ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர வாய்ப்பு நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர ... ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
இந்தியாவின் முதல் சூப்பர் கார் ரூ.30 லட்சத்தில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
16:43

இந்தியாவின் பிரபல கார் வடிவமைப்பாளர் திலிப் சாப்ரியா வடிவமைத்த இந்தியாவின் முதல் சூப்பர் கார் வருகிற 5ம் தேதி டில்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சூப்பர் காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் பார்முலா ஒன் பந்தயம் நடந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டை போற்றும் வகையில் இந்த காருக்கு புத் என்று திலிப் பெயரிட்டுள்ளார். ஆனால், இந்த பெயரை விரைவில் மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.பல கோடி மதிப்புடைய லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் வசதிகளை இந்த கார் பெற்றிருக்கும். ஆனால், எஞ்சின் திறன் மட்டும் லம்போர்கினி சூப்பர் கார்களுக்கு இணையாக இருக்காது. இந்த சூப்பர் காரில் ஹோண்டா நிறுவனத்தின் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சம் 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மேலும், இந்த கார் ரூ.30 லட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிவமைத்த திலிப் சாப்ரியாவின் பெயர் இந்திய ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் வெகு பிரபலம். இவர் நீண்ட காலமாக கார் வடிவமைப்பு துறையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் வாகன வடிவமைப்பு துறையில் பாண்டித்தியம் பெற்ற திலிப் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியவர். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் டிசி என்ற பெயரில் புதிய கார் வடிவமைப்பு மற்றும் ஆக்சஸெரீஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். டிசி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய சூப்பர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)