பதிவு செய்த நாள்
04 ஜன2012
01:35

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க் கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலை, ஐரோப்பிய நாடுகளின் பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது போன்றவற்றால், சர்வதேச அளவில், பங்கு வர்த்தகம் நன்கு இருக்காது என, பல ஆய் வாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். ஆனால், இவற்றையெல்லாம் பொய்ப்பிக்கும் வகையில், நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாயன்று மிகவும் சிறப்பாக இருந்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக, கரடியின் பிடியில் சிக் குண்டிருந்த பங்குச் சந்தையில், தற்போது, காளையின் ஆதிக்கம் தென்படுகிறது. இது தொடர்ந்து நீடித்தால், அது முதலீட்டாளர்களுக்கு ஆதாயம் அளிப்பதாக இருக்கும் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்பு துறையில், வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், தகவல் தொழில் நுட்பம், நுகர் பொருட்கள், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும், அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 421.44 புள்ளிகள் அதிகரித்து, 15,939.36 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,970.31 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,640.56 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய இரு நிறுவனங்கள் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 128.55 புள்ளிகள் உயர்ந்து, 4,765.30 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,773.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,675.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|