பதிவு செய்த நாள்
14 ஜன2012
00:17

சென்னை:சிரெய் இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ், வரிச்சலுகையுடன் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம், இத்துறை சார்ந்த, நீண்ட கால அடிப்படையிலான கடன் பத்திரங்களை நான்கு பகுதிகளாக வெளியிட்டு, 500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜி.எஸ்.அகர்வால் கூறினார்.
தற்போது, முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள கடன் பத்திர வெளியீடு வாயிலாக, 300 கோடி ரூபாய் திரட்டப்படும். 10 ஆண்டு கால முதிர்வு காலத்தைக் கொண்ட இக்கடன் பத்திர முதலீட்டிற்கு, 8.9 சதவீத வட்டி வழங்கப்படும். ஒரு கடன் பத்திரத்தின் முகமதிப்பு, 1,000 ரூபாய். வருமான வரிச் சட்டம், 80 சி.சி.எப்., பிரிவின் கீழ், இக்கடன் பத்திரங்களில், 20 ஆயிரம் ரூபா# வரையிலான முதலீட்டிற்கு வரிச் சலுகை கிடைக்கும் என அகவர்வால் மேலும் கூறினார்.முதற்கட்ட கடன் பத்திர வெளியீடு, ஜனவரி 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|