பதிவு செய்த நாள்
15 ஜன2012
02:28

மும்பை:சென்ற காலண்டர் ஆண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 1.4 சதவீதம் (9 கோடியே 21 லட்சத்து 71 ஆயிரத்து 280) சரிவடைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 9 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரத்து 575 கம்ப்யூட்டர்கள் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
பொருளாதார நெருக்கடி:ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம், உலக நாடுகளை பாதித்துள்ளது. இதனால், கம்ப்யூட்டர் உள்ளிட்ட, நுகர்வோர் சாதனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,கம்ப்யூட்டரில் உள்ளது போன்ற வசதிகளைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன், டேப்லெட் சாதனங்களின் வருகையாலும்,கம்ப்யூட்டர் விற்பனை குறைந்துள்ளது.
அமெரிக்கா, சென்ற டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 1.80 கோடி கம்ப்யூட்டர்களை விற்பனை செய்துள்ளது.இது, கடந்த 2010ம் ஆண்டின், இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்டதை விட, 5.9 சதவீதம் குறைவு.இதே காலத்தில், ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கம்ப்யூட்டர் விற்பனை, 9.6 சதவீதம் குறைந்து, 2.90 கோடியாக குறைந்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியம்:அதே சமயம், இதே காலத்தில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் கம்ப்யூட்டர் விற்பனை, 8.5 சதவீதம் அதிகரித்து 3.04 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், இது 10.6 சதவீத வளர்ச்சி என்ற மதிப்பீட்டை விட குறைவு.இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கம்ப்யூட்டர் விற்பனையும் குறைந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில், மதிப்பீட்டு காலத்தில், லத்தீன் அமெரிக்காவின் கம்ப்யூட்டர் சந்தை, 11.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து, விற்பனை 93 லட்சமாக உயர்ந்துள்ளது.
முதலிடம்:சென்ற டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், உலகளவிலான கம்ப்யூட்டர் விற்பனையில், ஹெவ்லெட் பேக்கர்டு நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எனினும், முந்தைய 2010ம் ஆண்டின் இதே காலத்து டன் ஒப்பிடும் போது, இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 16.2 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டின், டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இந்நிறுவனம் 1 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 266 கம்ப் யூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 1 கோடியே75 லட்சத்து 54 ஆயிரத்து 181 ஆக இருந்தது.
ஏற்றுமதி:கம்ப்யூட்டர் ஏற்றுமதியில், லெனோவா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 136 (1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரத்து 772 கோடி) ஆக உள்ளது.இதே காலத்தில், டெல் நிறுவனம் 1 கோடியே 16 லட்சத்து 33 ஆயிரத்து 880 (1 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 317), ஏசர் குழுமம் 98 லட்சத்து 23 ஆயிரத்து 214 (1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 606), ஏசஸ் நிறுவனம் 62 லட்சத்து 43 ஆயிரத்து 118 (51 லட்சத்து 80 ஆயிரத்து 913) மற்றும் இதர நிறு வனங்கள், 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 666 (3 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரத்து 786) கம்ப்யூட் டர்களை விற்பனை செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|