பதிவு செய்த நாள்
15 ஜன2012
14:12

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பொங்கல் வியாபாரத்தால் மார்கெட் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. பஸ்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடு அடைபடும் அளவிற்கு இருந்த கூட்டத்தால் அந்த பகுதியே திணறியது. பூக்களின் விலை மட்டும் தாறுமாறாக இருந்தது. ஒருகிலோ பிச்சிப்பூ 1250 ரூபாய்க்கு விற்பனையானது.
தமிழகத்தில் உள்ள மக்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இதனால் பொங்கல் பண்டிகை என்றால் ஒரு வாரத்திற்கு மேலாக மார்கெட் உள்ளிட்டவை களைகட்டி விடும். புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காக மசாலா பொருட்கள், காய்கறிகள், கரும்பு உள்ளிட்ட எல்லா பொருட்களும் வாங்கி கொடுப்பர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணிகள் துவங்கிவிடும் என்பதால் மார்கெட் பிசியாக இருக்கும். காய்கறி, கிழங்கு வகைகள் விலைகள் பெரிய அளவில் இல்லை. அதே சமயம் கரும்பு போன்றவற்றின் விலை மிக அதிகமாக இருந்ததால் மக்கள் வேறு வழியின்றி அதனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
அதே சமயம் பிச்சிப்பூ ஒரு கிலோ மொத்த மார்கெட்டிற்குள்ளே கிலோவிற்கு ஆயிரத்து 250 ரூபாயிற்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகைப்பூ வரத்து இல்லாததால் வந்த குறைவான பூக்கள் கிலோவிற்கு ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. சாதாரண மிகச் சிறிய மாலை 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூ விலையை கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் வேறு வழியில்லாத நிலையில் அதனை வாங்கிச் சென்றனர். 100 எண்ணம் கொட்ட கட்டிய பிச்சிப்பூ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை விற்றாலும் மொத்த பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|