பதிவு செய்த நாள்
15 ஜன2012
15:18

உடுமலை : வெளிமாநில வரத்து குறைந்துள்ளதால், அறுவடை சீசன் துவக்கத்திலேயே, மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு சீசனிலும் சராசரியாக 2.8 லட்சம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. கோழி தீவனத்துக்காக மட்டும் 12 லட்சம் டன் தேவையுள்ள நிலையில், 4 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க, கர்நாடகா, ஆந்திரா உட்பட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
நடப்பு பருவத்தில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறுவடை துவக்கத்திலேயே நல்ல விலை கிடைத்து வருவதால், மக்காச்சோள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், நேற்றைய நிலவரப்படி, மக்காச்சோளம் மூட்டைக்கு 1,195 ரூபாய் விலை கிடைத்தது. கடந்த மாதம் வரை, சராசரியாக ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வரத்து குறைந்துள்ளதால் மக்காச்சோளத்துக்கு விலை உயர்ந்து வருகிறது.
வேளாண் விற்பனை வாரிய அதிகாரிகள் கூறுகையில், "வெளிமாநில வரத்து குறைந்துள்ளதால், மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கோழித்தீவன தேவைக்காக, அதிகளவு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள், மக்காச்சோளத்தை இருப்பு வைக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்' என்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|