பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:20

சென்னை:கார் மாநிலத்திற்கு வரும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக, அம்மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே. சுக்லா கூறியதாவது:
பீகாரில் பெருமை வாய்ந்த, புத்த கயா, நாளந்தா பல்கலைக்கழகம், வைஷாலி, பாவபுரி, விக்ரமசீலா உள்ளிட்ட பல இடங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சென்ற 2011ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 304 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதில் உள்நாட்டிலிருந்து, 1 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 531 பேரும், வெளிநாடுகளிலிருந்து, 5 லட்சத்து 27 ஆயிரத்து 773 பேரும், பீகார் மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில், பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புடன், சர்வதேச தரத்தில் ரயில், விமான மற்றும் பஸ் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல், தொலைத் தொடர்பு மற்றும் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இது தவிர, நமது பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில், கண்காட்சி, கலாசார திருவிழா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். இவ்வாறு சுக்லா கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|