பதிவு செய்த நாள்
23 ஜன2012
00:09
புதுடில்லி: வரும் 2016ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் வர்த்தக துறை மதிப்பீடு செய்துள்ளது.இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து, அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து, சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. 2010ம் ஆண்டில், இந்த மூன்று நாடுகளிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் மூலம், அமெரிக்காவுக்கு, 1,500 கோடி டாலர் (75 ஆயிரம் கோடி ரூபாய்) வருவாய் கிடைத்துள்ளது.அந்த ஆண்டில், அமெரிக்கா சென்ற இந்திய பயணிகளின் எண்ணிக்கை, 6 லட்சத்து 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, 2003ம் ஆண்டில், அமெரிக்காவிற்கு சென்ற பயணிகளை விட, 139 சதவீதம் (2 லட்சத்து 72 ஆயிரம் பேர்) அதிகமாகும்.2010ம் ஆண்டு, அமெரிக்காவில், இந்திய சுற்றுலா பயணி ஒருவரின் சராசரி செலவு, 2 லட்சம் ரூபாய் என்றளவில் இருந்தது. அந்த ஆண்டில், அமெரிக்கா சென்ற 6 லட்சத்து 51 ஆயிரம் பேர், 286 கோடி டாலர் (14 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) அளவிற்கு செலவழித்துள்ளனர்.வரும், 2016ம் ஆண்டில், அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலத்தில், சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, முறையே, 135 சதவீதம் மற்றும் 274 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு, செல்வதற்கு விசா வழங்குவது எளிதாக்கப்படுமானால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|