ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 17 சதவீதம் சரிவுஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 17 சதவீதம் சரிவு ... உருக்கு உற்பத்தி 7 கோடி டன்னாக உயர்வு உருக்கு உற்பத்தி 7 கோடி டன்னாக உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டீசல் காருக்கு உற்பத்தி வரி உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
02:10

புதுடில்லி:டீசல் கார் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல், மண்ணெண்ணெய், காஸ் உள்ளிட்டவற்றை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்கின்றன. உதாரணமாக, டில்லியில் ஒரு லிட்டர் டீசல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, இதன் இறக்குமதி செலவை விட 14.57 ரூபாய் குறைவு. இந்த தொகையை, ஆண்டுக்கணக்கின் அடிப்படையில் மானியமாக வழங்கும் போது, மத்திய அரசுக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.
இந்த மானியச் செலவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், வரும் பட்ஜெட்டில் டீசல் கார்களுக்கு அதிக உற்பத்தி வரி விதிக்க மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தற்போது, 4 மீட்டர் நீளமுள்ள 1,500 சி.சி. என்ஜின் திறன் கொண்ட டீசல் மற்றும் 1,200 சி.சி. என்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் கார்களுக்கு 10 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.மக்கள் பயன் பெறும் வகையிலான போக்குவரத்து மற்றும் வேளாண் துறை நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் டீசலை வழங்கி வருகிறது.
இருப்பினும், தனிநபர் பயன்பாட்டிற்கான சொகுசு கார்கள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள், வணிக வளாகங்களில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பயன்பாட்டில், தனிநபர் கார்களுக்கான டீசல் பயன்பாடு 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக (1996-97, 2004-05 ஆண்டுகள் தவிர) பெட்ரோலை விட டீசல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, 2011ல், ஏப்ரல் - நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், டீசல் பயன்பாடு 7.4 சதவீத வளர்ச்சியடைந்தது. அதேசமயம், பெட்ரோல் பயன்பாடு, மைனஸ் 4.3 சதவீத வளர்ச்சி என்ற அளவில் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், டீசல், மண்ணெண்ணெய், காஸ் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான மானியச் செலவு 1 லட்சத்து 36 ஆயிரத்து 936 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.டீசல் கார்களுக்கு அதிக உற்பத்தி வரி விதிக்கப்படும் நிலையில், டீசல் பயன்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந் நடவடிக்கைக்கு, மத்திய கனரக தொழில்கள் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)