பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:28

புதுடில்லி : வரும் 2015-16ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி 5 லட்சம் கோடி ரூபாயை (10 ஆயிரம் கோடி டாலர்) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 1 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் (3,380 கோடி டாலராக) என்ற அளவில் இருந்தது என அசோசெம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-2000 முதல் 2010-11ம் நிதி ஆண்டு வரையிலான காலத்தில், ஆண்டு சராசரி வளர்ச்சி விகித அடிப்படையில், வரும் 2015-16ம் நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி 10,000 கோடி டாலரை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து, அதிக அளவு தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி மற்றும் உற்பத்தி வரி அதிகரிப்பால், அவற்றின் விலை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்வதில், இந்தியா முக்கிய நாடாக விளங்குகிறது. மொத்த தேவையில், மூன்றில் ஒரு பங்கு தங்கத்தை நம்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது. இதனால், 2001-02ம் நிதியாண்டில், 410 கோடி டாலராக இருந்த, தங்க இறக்குமதி செலவினம், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 3,380 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|