பதிவு செய்த நாள்
07 பிப்2012
00:31

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் முதல், வர்த்தக தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள் 15 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ரூபாயை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாகவே, தொடர்ந்து ஐந்து வாரங்களாக சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மற்றும் பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்து, ஆரோக்ய பராமரிப்பு, நுகர் பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 102.35 புள்ளிகள் அதிகரித்து, 17,707.31 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,829.72 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,595.10 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 35.80 புள்ளிகள் உயர்ந்து, 5,361.65 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,390.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,327.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|